பொதுவில் தந்தத்தால் ஆன பல்லக்கு மிகவும் அபூர்வம். அத்தகைய ஒரு பல்லாக்கு
மகாபலிபுரம் அருகில் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவில்
இருக்கிறது. திருமணத் தடைகள் அகற்றும் பெருமாள் இவர். காலவர் என்றொரு முனிவர் இருந்தார். அவருக்கு 360 பெண்கள் இருந்தனர்.
தினமும் ஒரு பெண் வீதம் அந்த 360 பேரையும் மணந்தமையால் திருவிடந்தை
ஆதிவராகப் பெருமாளுக்கு, நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர். இங்குள்ள
தந்தப்பல்லாக்கை இப்போது சுவாமி புறப்பாட்டுக்கு பயன்படுவதில்லை. விலை
உயர்ந்தது என்பதால் அரும் பொருளாக பாதுகாக்கப்படுகிறது.