சந்திராஷ்டமம் என்றால் என்ன;

251 views
Skip to first unread message

prasannam

unread,
Oct 15, 2015, 12:55:27 AM10/15/15
to have-a...@yahoogroups.com, sadgo...@googlegroups.com, tamila...@googlegroups.com


Subject:
  சந்திராஷ்டமம் என்றால் என்ன;



>
> அது என்ன செய்யும்?
>
>
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேப்பர் படிக்கும் பொழுதும் சரி, காலையில் தினசரி காலண்டரை காணும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும்.
>
>
அது என்ன சந்திராஷ்டமம் ?
>
>
அதன் விளக்கத்தைக் காணலாம்.
>
>
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும்.
>
>
இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்.
>
> .
பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்..
>
>
சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.
>
>
நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால்,
>
>
அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். =
>
>
சந்திராஷ்டமம்.அஷ்டமம்+ சந்திரன்..
>
> ,
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்சந்திராஷ்டமகாலம் என்கிறோம்..
>
>
அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.
>
>
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில . தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.
>
>
மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
>
>
ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.
>
>
மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்,
>
>
பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். .
>
>
புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,
>
>
புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள்.
>
>
முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.
>
>
குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள் .
>
>
ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.
>
>
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன
>
>
ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன்.
>
>
ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும்
>
> 17
ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்.
>
>
உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . .
>
>
உங்கள நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும் .
>
>
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது.
>
>
அந்த குறிப்பிட்ட நட்சத்திர வரும் நாட்களில், நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.
>
>
பிறந்த நட்சத்திரம், சந்திராஷ்டம நட்சத்திரம்:
>
>
அஸ்வினி - அனுஷம்
>
>
பரணி - கேட்டை
>
>
கிருத்திகை - மூலம்
>
>
ரோகிணி - பூராடம்
>
>
மிருகசீரிஷம் - உத்திராடம்
>
>
திருவாதிரை - திருவோணம்
>
>
புனர்பூசம் - அவிட்டம்
>
>
பூசம் - சதயம்
>
>
ஆயில்யம் - பூரட்டாதி
>
>
மகம் - உத்திரட்டாதி
>
>
பூரம் - ரேவதி
>
>
உத்திரம் - அஸ்வினி
>
>
அஸ்தம் - பரணி
>
>
சித்திரை - கிருத்திகை
>
>
சுவாதி - ரோகிணி
>
>
விசாகம் - மிருகசீரிஷம்
>
>
அனுஷம் - திருவாதிரை
>
>
கேட்டை - புனர்பூசம்
>
>
மூலம் - பூசம்
>
>
பூராடம் - ஆயில்யம்
>
>
உத்திராடம் - மகம்
>
>
திருவோணம் - பூரம்
>
>
அவிட்டம் - உத்திரம்
>
>
சதயம் - அஸ்தம்
>
>
பூரட்டாதி - சித்திரை
>
>
உத்திரட்டாதி - சுவாதி
>
>
ரேவதி - விசாகம்
_

Reply all
Reply to author
Forward
0 new messages