பழமை கலந்த பாரம்பரிய உணவு முறை
(ஜீவா அசோகன், திருவண்ணாமலை)
tvm.k...@gmail.com,
உலகின் வாழ்விற்கு மூலாதாரம் உன்னத உணவே!
உணர்ந்து உண்டால் அதுவே வாழ்வின் உயர்வு!
இயற்கை உணவை இசைந்து உண்டால்…
இளைஞர் போல் வாழலாம் எந்நாளும்!
வெந்த உணவை வேண்டிய மட்டும் எடுத்துக்கொள்!
பொறித்த உணவைப் போதுமென்று நிறுத்திக் கொள்!
இளைத்த உடலுக்கு இதமான எள்ளு!
கனத்த தேகத்துக்கு கடினமான கொள்ளு!
தேநீர் குளிர்பானம் தேவையில்லை உனக்கு!
தென்னையின் இளநீரோ தேவாமிர்தம் நமக்கு!
விதையுள்ள கனிகளை விருப்புடன் உண்டால்…
கால தேவன் கூடக் காலம் கடந்து வருவான்!
பானையில் வடித்த பழையமுது பருகி வந்தால்
பல நூறாண்டு வாழலாம் நலமாய்!
பருப்புடன் நெய் கலந்து பக்குவமாய்ச் சாப்பிட்டால்…
பள பளவென உடல் பாங்காக இருக்கும்!
சீரகம் கலந்த கொதி நீரை அருந்தி வந்தால்…
தீரா வயிற்று வலி தீர்ந்து போய்விடும்!
நாற்பது குவளை நீரை நாள் தோறும் குடித்தால்…
நாடி நரம்புகள் நன்றாக வேலை செய்யும்!
மனதில் இதை நிறுத்தி மறக்காமல் கடைபிடித்தால்…
மரண தேவன் மறந்தும் கூட நெருங்கமாட்டான்!
தண்ணீர் சிக்கனம்! தேவை இக்கணம்! !
கி.ஜீவாஅசோகன், திருவண்ணாமலை
9444428592