மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் சார்பாக தருமபுரம் ஆதீனம் பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் சுமார் 75000 சதுர அடியில் 3000 மரக்கன்றுகள் அதாவது குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்வு இன்று மிகச் சிறப்பாக நடந்தது.
தருமபுரம் ஆதீனம் 27ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் அவர்களும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நா. ஸ்ரீ நாதா I.P.S., மற்றும் ரோட்டரி மாவட்டம் 2981 மாவட்ட ஆளுநர் ஆர்.பாலாஜி பாபு மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள், பொதுமக்கள், தருமபுரம் ஆதீனம் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுவாமிநாதன், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை ரோட்டரி முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர், தருமபுரம் ஆதீனம் கல்லூரியின் செயலாளர் முனைவர் இரா. செல்வநாயகம், ரோட்டரி மாவட்ட சேவை திட்டங்களின் தலைவர் V.இராமன் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவர் கே துரை, மாவட்ட இணைச்செயலாளர் எம் முருகேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.