Rajesh
unread,Apr 2, 2012, 6:02:54 AM4/2/12Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to realf...@googlegroups.com
தேக்கு பிறப்பிடம்: தேக்கு மரம் இந்தியா மற்றும் ஜாவாவின் வட கிழக்குப் பகுதிகளை தாயமாகக் கொண்டது.
வாழ்நாள்: இயற்கை வனங்களில் 100 - 120 ஆண்டுகளுகம்
செயற்கை வளர்ப்பில் 70-80 ஆண்டுகளும், மற்றும் 40 - 60 ஆண்டுகளுக்குப்
பின் மறுதாம்பாகவும் வளரக்கூடியது.
காலநிலை மற்றும் மண்: வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல
காலநிலையில் செழித்து வளரும். மணல் கலந்த இறுபொறைமண், 8.5க்கும் குறைவான
கார அமில நிலையுள்ள, நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் சிறப்பாக வளரும்.
மழை: ஆண்டுக்கு 1000-1500 மி.மீட்டர் மழைப்பொழிவும், 750
மி.மீ. குறைவான மழைப்பொழிவுள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை தேக்கு
மரத்திற்கு உண்டு.
நாற்றங்கால் செய்முறைகள்: 1000-1500 நாற்றுகளுக்கு 50 -
60% முளைப்புத் திறனுடைய 2.5 முதல் 3 கிலோ விதையானது தேவைப்படுகிறது. 2.5
செ.மீ. சுற்றளவு, கழுத்துப்பகுதி 2-3 செ.மீ மற்றும் 23 செ.மீ நீளமுடைய
அடித்தண்டுப்பகுதி நாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இடைவெளி: 1.8X1.8 மீ மற்றும் 2X2 மீ இடைவெளி பொதுவாக கடைப்பிடிக்கப்படுகிறது. அடர்த்தி மிகும் பொழுது கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நடவு செய்தல்: நாற்பது நாள் வயதுடைய நாற்றுகள் நடவுக்கு
ஏற்றவை. மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முன் நடவு செய்வது வெற்றி
கரமானது. சதுர (அ) நேர்க்கோட்டு முறையில் நடவு செய்யலாம்.
45-60 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழமுடைய குழிகள் ஏதுவானது. அடித்தண்டு
நடவிற்கு 15 செ.மீ. விட்டமுள்ள 30 செ.மீ. ஆழமுடைய குழிகளில் நடவு
செய்யலாம்.
பயிர்பாதுகாப்பு:
பூச்சிதாக்குதல்: இலையுண்ணும் புழு (ஐபேலியா பெளரியா) மற்றும் இலை எலும்புக் கூடாக்கிப் புழு (யூடெக்டேடினா மகோராலிஸ்)
நோய்த்தாக்குதல்: இலைக்கருகல் (ரைசொக்டானியா சொலானி மற்றும் பழங்களின் மீது பூஞ்சான் தாக்குதல் (அல்டர்னேரியா சிற்றினம்).
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மிகுந்த இலைகளை வெட்டியகற்றி எரித்து விட
வேண்டும். தேக்குத் தோப்புகளில் களைச் செடிகளை வளர விடக் கூடாது.
சிறப்புத் தன்மைகள்: தேக்கு மரத்தில் ‘டெக்டோல்’ எனும் பினால் சாறு உள்ளது. இது தண்டு அழுகல் மற்றும் கரையான் அரிப்பைத் தடுத்து விடுகிறது.
பயன்கள்: அனைத்து மர உபயோகங்களுக்கும் ஏற்றது. மரக்கட்டையின் கடினத்தன்மைக்காக தேக்கு மரம் “மரங்களின் அரசன்” என்று சிறப்பிக்கப்படுகிறது.
விளைச்சல்:
12 முதல் 26 கன மீட்டர் பருமனுள்ள கட்டை ஒரு ஆண்டுக்கு தரவல்லது.
Rajesh. S
Future Farmer