Studying details for Agriculture

3 views
Skip to first unread message

Rajesh

unread,
Jan 24, 2012, 11:47:20 PM1/24/12
to Organic Agriculture
வேளாண் பட்டப்படிப்பு

விவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டப்படிப்பை படிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகம் தொலைத்தூரக் கல்வி பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த
படிப்பில் விவசாயிகள் சேர்ந்து படிக்கலாம். இப்படிப்பில் சேரும்
விவசாயிகளுக்கு ஐம்பது சதவிகித கட்டண சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது
என
தெரிவிக்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும்
தொலைத்தூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் வள்ளுவ பாரிதாசன்.

இவர் ”விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில்
ஆர்வம் உள்ளவர்கள் முறையான வேளாண் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற
நோக்கில்
இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப படிப்பை அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது.
இந்த படிப்பில் பயிர் உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண்
பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல்,
வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம்
மற்றும் பண்ணைப் பார்வையிடல் போன்ற பாடங்கள் இடம் பெறுகின்றன. இந்த
படிப்பு
மூன்றாண்டு கொண்டதாகவும், ஆறு பருவங்களை கொண்டதாக
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் இப்படிப்பில் சேர்ந்து பல
விஷயங்களை
கற்றுக் கொள்ளலாம்.

இந்த படிப்பில் சேர விவசாயிகளின் வயது 27
நிரம்பியவராகவும், பத்தம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
இப்படிப்பில் சேர உள்ள விவசாயிகளுக்கு 50% சலுகை கட்டணத்தை தமிழக அரசு
அறிவித்துள்ளது. இந்த சலுகையை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு சேர்ந்து
பயன்பெற வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 94421 11058, 94421 11048,
0422 – 6611229 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொளண்டு விளக்கம்
பெறலாம்”
என்கிறார் வள்ளுவ பாரிதாசன்.

Rajesh - Future Farmer

Reply all
Reply to author
Forward
0 new messages