Pest Control 02

6 views
Skip to first unread message

Rajesh

unread,
Feb 2, 2012, 2:06:00 AM2/2/12
to Organic Agriculture
இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்வது பற்றி
தெரிந்துகொள்வோமா?

சூடோமோனாஸ் எதிர் உயிரி பாக்டீரியாவை நெல்லுடன் விதைநேர்த்தி செய்யனும்
அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதத்தில் உலர் விதை நேர்த்தி
செய்யனும், இரண்டாவதாக நாற்றங்காலில் இடனும், அதாவது நெல் நாற்றுகளை
பறிப்பதற்கு 1 நாள் முன்பு 8 செண்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ வீதத்தில்
நாற்றங்காலில் இடனும் மேலும் நடவு நட்ட வயலில் இடனும், அதாவது நடவு நட்ட
பின் 20-30 நாட்களில் 1 எக்கருக்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன்
கலந்து இடவேண்டுகம்.

இனக்கவர்ச்சிப்பொறி மூலம் குருத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சி
நடமாட்டத்தை கண் காணித்தல் மற்றும் கவர்தழித்தல் பற்றி தெரிந்துகொள்வோமா?

நடவு நட்ட 25-ம் நாள் முதல் இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வீதம்
வைப்பதன் மூலம் குருத்துப்பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.
பொறியில் உள்ள இனக்கவர்ச்சி குப்பியை 3 வாரங்களுக்கு ஒரு முறை
மாற்றவேண்டும்.


Rajesh - Future Farmer

Reply all
Reply to author
Forward
0 new messages