Ban Endosulfan

13 views
Skip to first unread message

Rajesh

unread,
Jan 25, 2012, 12:03:44 AM1/25/12
to Organic Agriculture
இயற்கை,

மனிதன் வாழ்வதற்கேற்ற அனைத்தையும் நல்ல முறையில் வழங்கி
இருக்கிறது.. புழுக்கள், பூச்சிகள், பறவைகள் ,விலங்குகள், மனிதர்கள்
இவைகள் அனைத்திற்குமான வாழ்வியலை ஒன்றையொன்று சார்ந்தும், ஒன்றினால்
ஒன்று கெடாதவாறும் இயற்கை மிக நேர்த்தியாய் ஒரு சுழற்சி முறையில் வகுத்து
வைத்திருகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் நம் பேராசையினால் இவ்வழகான
சுழற்சியில் குழப்பத்தை ஏற்ப்படுத்தி,
ஒன்றொன்றாய் சீரழித்து வருகிறோம்.. அப்படி நம் பேராசையினால் சீரழித்த
ஒன்று தான் இந்தியர்களின் உணவாதாரமான பாரம்பரிய இயற்கை விவசாயம்..
விவசாயம் சீரழிந்ததற்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் செய்த
விதைகளும்,
பயிர்களுக்கு தெளிக்கப்படும் நவீன உரம் மற்றும் பூச்சிகொல்லி
மருந்துகளும்
தான். மரபணு மாற்றம் செய்த விதைகளினால் விளைச்சல் பொய்த்து போய் விவசாயம்
சீரழிவது மட்டும் அல்லாமல், பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிகொல்லி
மருந்துகள் அதில் விளைந்த காய்கறிகளை உட்கொண்ட மனிதனை கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் உயிர்கொல்லியாக மாறியிருக்கிறது.

அப்படி மிக மோசமான
விளைவை ஏற்படுத்திகொண்டிருக்கிற ஒரு பூச்சிகொல்லி மருந்து தான்
எண்டோசல்பான் என்னும் உயிர்கொல்லி. இதன் கொடூரத்தை உணர்ந்த கேரளா,
கர்நாடக,
ஆந்திர மாநிலங்கள் முற்றிலுமாக தடை செய்து விட்டது. ஆனால் நம் தமிழ்
நாட்டில் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எண்டோசல்பான்
என்னும் விஷத்தை இந்தியா முழுவதும் தடை செய்யக் கோரி இயல்வாகை சூழலியல்
இயக்கம் & குக்கூ குழந்தைகள் படிப்பகம் சார்பில் ஈரோடில் கடந்த ஜூன் 5
ம் தேதி கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
எண்டோசல்பான் அதிகமாக பயன்படுத்தும் கோபி செட்டிபாளையம், ஈரோடு,
நாமக்கல்,
திருப்பூர் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் , முக்கிய பேருந்து
நிறுத்தங்கள் ஆகிய இடங்களில் இதைப் பற்றிய விழிப்புணர்வு
பிரச்சாரங்கள்,மற்றும் இதன் தீமைகள் அடங்கிய புத்தக விநியோகங்கள் மூலமும்
பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. நம் உடலை, நம் பாரம்பரிய
விவசாயத்தை, நம் வாழ்வியலை
கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துக் கொண்டிருக்கிற விஷத்தை முற்றிலுமாய்
ஒழிப்போம். இனி வரும் சந்ததியினரையாவது நஞ்சில்லா உலகில் வாழ வழி
செய்வோம்.
ஒன்று கூடி ஒழித்திடுவோம். வருக..

நன்றி!

இயல்வாகை சூழலியல் இயக்கம்.. (iyalv...@gmail.com)

இன்னும் அறிய : 9965689020, 9944850887.

--
" செல்லும் வழி இருட்டு,செல்லும் மனம் இருட்டு,
சிந்தை அறிவினிலும் தனி இருட்டு.., "

Cuckoo Movement For Children
# 25, Mandhoppu,
Pa-Vu-Sa Nagar, Polur Road,
Tiruvanamalai - 606 601,
Tamilnadu - India,
Contact No : +91 9965689020,9944850887.

Reply all
Reply to author
Forward
0 new messages