Pest Control 01

8 views
Skip to first unread message

Rajesh

unread,
Feb 2, 2012, 2:04:54 AM2/2/12
to Organic Agriculture
சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி

பயிர் மேலாண்மைக்கு பயன்படும் உயிர் எதிர்க்கொல்லியான சூடோமோனாஸ் மற்றும்
டிரைக்கோடெர்மாவிரிடி பற்றி தெரிஞ்சுக்குவோமா

ஒருங்கிணைந்த பயிர் நோய் மேலாண்மையில் உயிர் எதிர்கொல்லிகள் மிக முக்கிய
பங்கு வகிக்கின்றன. உயிரியல் முறை நோய் மேலாண்மை என்பது உயிருள்ள
நுண்ணியிர்களைக்கொண்டு நோய்க்காரணிகளை அழித்து பயிர்களை பாதுகாப்பது. இவை
மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இவற்றில் பூசணங்களும்
பாக்டீயாக்களும் அடங்கும். பாக்டீரியா மற்றும் பூஞ்சாண வகையைச்சார்ந்த
சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவை அதிக அளவில் உயிர்
எதிர் கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது டால்க் துகள்களில்
அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதுன்னு காட்டுத்தோட்டம் மண்
மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர்
டாக்டர் சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.

சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி காட்டுத்தோட்டம் மண் மற்றும்
நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்துல விற்பனை செய்யப்படுகிறது.
உயிர் உரங்களான சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி நோய்க்காரணிகளை
சிறப்பாக கட்டுப்படுத்துவது மட்டுமின்றி நன்மை செய்யும் மற்ற
உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இத்தகைய உயிர் உரங்கள்
காட்டுத்தோட்டம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தில்
உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சூடோமோனாஸ்
மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி தலா ரூ.75/- க்கு விற்பனை செய்றாங்க.

Rajesh - Future Farmer

Reply all
Reply to author
Forward
0 new messages