Sand Experiment 01

6 views
Skip to first unread message

Rajesh

unread,
Feb 2, 2012, 2:11:16 AM2/2/12
to Organic Agriculture
வாழை சாகுபடிக்கான மண்வகைகளும், நிலத்தை தயார் படுத்துதலும்

• வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல
வடிகால்தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில்
கரிமப்பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை(PH 6-8) மண்வகைகள்
மிகவும் நல்லது.

நிலத்தை தயார்ப்படுத்துதல்:

• நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள்
நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை
உழ வேண்டும். நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான
தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே
நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

• செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2
அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழுஉரம், நெல் உமிச்
சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.

• தோட்டக்கால் நிலங்களில் 2x2x2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில்
புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழுஉரம் 5kg ஆகியவற்றை இட்டு பின்பு வாழை
நடவு செய்யலாம்.


Rajesh - Future Farmer

Reply all
Reply to author
Forward
0 new messages