Organic Agriculture Winning Steps

6 views
Skip to first unread message

Rajesh

unread,
Jan 24, 2012, 11:46:19 PM1/24/12
to Organic Agriculture
விவசாய வெற்றி படிகள்

1 . கடனுக்கு இடுபொருட்களை வாங்குவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

2 . இடுபொருட்கள் வாங்குவதிலும் கூடுமான வரை இடைத்தரகர்களை தவிர்க்க
வேண்டும்.

3 . புதுமையான தொழில்நுட்பங்களும்/ செயல்முறைகளையும் நடைமுறைப்படுத்திப்
பார்க்க வேண்டும்.

4 . நீரை சிக்கனமாகவும்,சிறந்த பயனுள்ள முறையிலும் கையாள வேண்டும்.

5 . விவசாய நிலங்களையும்,விவசாயத்தையும் கைவிட்டு விடக் கூடாது.
மரங்களையாவது நட்டு வைத்து பராமரித்து வரவேண்டும்.

6 . பயோடெக் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.

7. இரசாயன உரங்களையும், பூச்சிகொல்லி மருந்துகளையும் படிப்படியாக
நிறுத்திவிட்டு இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும்.

8. வேளான் பத்திரிக்கைகள், புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை
ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

9 .விவசாயத்தை ஒரு வெற்றிகர தொழிற் நிறுவனமாக நடத்த வேண்டும்; பழைய
சம்பிரதாயமாக மட்டும் நடத்த வேண்டாம்.

10 . விவசாய கண்காட்சி, கருத்தரங்கு, பயிலரங்குகளுக்கு சென்று தகவல்களை
சேகரித்து நடைமுறைபடுத்தி பார்க்க வேண்டும்.

11 . வரவு, செலவு, முதலீடு கணக்கு முறையாக ஒவ்வொரு பயிருக்கும் பராமரிக்க
வேண்டும்.

12 . வெற்றி பெற்ற விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று அவர்களின்
அனுபவங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

13 . மற்ற விவசாயிகளுடன் இணைந்து எல்லோருக்கும் சாதகமான பயிர், ரகம்,
சந்தை வைப்பு, விற்பனை விலை இவற்றை நிர்ணயம் செய்து அதன்படி விவசாயத்தை
மேற்கொள்ள வேண்டும்.

14 . வீட்டில் ஒருவரையாவது விவசாய படிப்பிற்கு தயார்படுத்த விருப்பம்
கொண்டு ஊக்கப்படுத்துவோம்.

15 . சுற்றுச்சுழலுக்கு நன்மை செய்யக்கூடிய அதிநவீன நஞ்சில்லா தொழில்
நுட்பங்களை வரவேற்று பயன்படுத்தி பார்ப்போம்.

16 .இலவச மாதிரி இடுபொருட்களை வேண்டாமல் தவிர்த்து, குறைந்த அளவில்
வாங்கி பயன்படுத்தி பார்ப்போம்.

17 . தேர்ந்த வேளாண் ஆலோசகரை நியமித்துக்குக் கொள்ளவோம்.

18 .இணையதளம், மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துவோம்.

19 .தேவைக்கதிகமான, முறையற்ற இரசாயன உர, பூச்சிகொல்லி மருந்தின்
பயன்பாட்டை நிறுத்திக்கொள்வோம்.

20 . விவசாயம் எப்போதும் நல்ல வருமானம் தரும் ஒரு உயர்ந்த தொழில் என்பதை
மனப்பூர்வமாக நம்புவோம்.

21 . இளைஞர்களையும், யுவதிகளையும் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த துறைகளில்
ஈடுபடுத்த முயற்சி மேற்கொண்டு நாமும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக
இருப்போம் .

22 . நாம் அதிக லாபம் தரக்கூடிய, நன்மை பயக்கக்கூடிய தொழில் நுட்ப
தகவல்களை மற்ற சக விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்வோம்.

23 . விவசாய சுய உதவிகுழுக்கள், விவசாய சங்கங்களை தோற்றுவிப்போம்.

24 .விவசாயத் தொலைக்காட்சி நிகழ்சிகளை தவறாமல் காண்போம்.

25 . காலங்காலமாக பயிரிட்டு வரும் பயிற்முறைகளை மாற்றி, பொருளாதாரப்
பயிர்களாக (வணிக பயிர்கள்) பயிரிடுவோம்.

26 . முடிந்தால் அடுத்த அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளுக்கு சென்று
அங்குள்ள தொழில்நுட்பங்களை நம் நிலங்களில் குறைந்த அளவில் பயன்படுத்தி
பார்ப்போம்.

27 . வேளாண்துறை, வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள்
போன்றவற்றுடன் இணைந்து பணிபுரிந்து அறிவைப் பகிர்ந்து கொள்வோம்.

28 . மாதிரி பண்ணை/ மாதிரி கிராமம்/ மாதிரி பண்ணைக்குழு போன்ற ஏதேனும்
அமைய முயற்சி செய்வோம்.

29 .விவசாயத்தை இயந்திரமயமாக்கி. எங்கெல்லாம் வேலை ஆள் தேவையை குறைத்து
உற்பத்தி திறனை அதிகரிப்பது என ஆராய்வோம் .

30 . வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதோடு
இல்லாமல், தகவல் தொடர்பு துறையையும் விவசாயி வளர்ச்சிக்கு பயன்படுத்திக்
கொள்வோம்.

31 . குடும்பங்களுக்கு உரிய காப்பீட்டு திட்டத்தை உறுதி படுத்திக்
கொள்வோம்.

32 . கடுமையாக உழைக்காமல், புத்திசாலித்தனமாக உழைப்போம்.

33 . நாளை உலகை விவசாயம் தான் ஆளும் என்ற நம்பிக்கை கொள்வோம்.

34. கூடுமானவரை இடுபொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி
விளைபொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே விற்பனை செய்ய வழிவகை
செய்து
கொள்வோம்.

35. மிக அதிக முக்கியத்துவம் விலைபொருளின் தரத்திற்கும் தருவோம்,அதிக
விளைச்சலுடன் தரமான விளைச்சல், கூடுதல் லாபம் தரும்.

36. நம் தோட்டத்தின் ஒரு பகுதியை, புதுமையான தொழில்நுட்பங்களை
பயன்படுத்தி பார்க்க ஏதுவான மாதிரி நிலமாக பராமரிப்போம்.

37. விவசாயத்தில் மிக பெரிதாக லாபம் சம்பாதித்து பெரிய சாதனை புரிய மனதை
தயார்படுத்துவோம்.

38. 1 ஏக்கரில் சுமாராக விவசாயம் செய்வதை விட,25 சென்டில் லாபகரமாக
விவசாயம் செய்வோம்.

39 . நம் விளைபொருளுக்கு ‘பிராண்ட்’ பெயரிட்டு நாமே விற்பனை செய்வோம்.

40 . விவசாய நிலமே தொழிற்சாலையாக அதில் பணிபுரியும் தொழிலாளர்களே
ஊழியர்களாக, விளைபொருட்களே உற்பத்தி பொருட்களாக உருவகித்து ஒரு
நிறுவனத்தைப் போல் நடத்துவோம்.


Rajesh - Future Farmer

Reply all
Reply to author
Forward
0 new messages