அனைவர்க்கும் காலை வணக்கம்,,
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நம் பெற்றோரால் கிடைத்தது. பெற்றோர் இல்லாத வாழ்க்கையை சிந்தித்து பார்க்க முடியவில்லை. ஆனால் பெற்றோர் முகம் பார்க்காமல், உறவினர்கள் முகம் பார்க்காமல் வாழும் சின்ன பிஞ்சு உள்ளங்களை மகிழ்விக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆம் நண்பர்களே ரோடரக்ட் ன் பெயரில் நம் தங்கை, தம்பிகளுக்கு அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்வார்கள். இறைவனை காண நாங்கள் முற்பட வில்லை குழந்தைகளை மகிழ்வித்து எங்கள் மனதிற்கு உதவும் திறனை அதிக படுத்துகிறோம்.
மற்றவர்களை மகிழ்வித்து பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதியானது. ஆம் சகோதரர்களே ரோடர்க்ட் ன் மூன்றாம் குழுவின் அணைத்து சங்கத்தின் நண்பர்கள் சேர்ந்து குழந்தைகளை மகிழ்விக்க போகிறோம். வரும் தீபாவளி அன்று அவர்களது இல்லத்திற்கு சென்று அவர்களை பார்த்து, பேசி, விளையாடி அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற போகிறோம். விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். இந்த அருமையான நிகழ்விற்கு நாங்கள் இட்ட பெயர் "டியா 11". அனைவரையும் எங்கள் குழு மூன்றின் சார்பாக எங்கள் உளமார வருக வருக என வரவேற்கிறோம்.
இப்படிக்கு
அ. சைமன்
பக்காஸ் ரோடர்க்ட் சங்கம்
ரஐ டிஸ்ட் 3201