குவைத்தில் முதல் முறையாக "மக்கள் கருத்தரங்கம்"

6 views
Skip to first unread message

Kuwait Tamil Islamic Committee

unread,
Dec 13, 2012, 2:46:05 AM12/13/12
to
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
 
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்... சங்கத்தின் 8ம் துவக்க நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சமூக மாற்றத்திற்கான ஓர் பயிற்சிக்களமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கும் "மக்கள் கருத்தரங்கம்" என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
 
நாள்21.12.2012 வெள்ளிக்கிழமை - ஹிஜ்ரீ 1434 ஸஃபர் பிறை 7
 
நேரம்: இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை...
 
இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.

தலைமை: மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, தலைவர், K-Tic
 
தலைப்பு: சமூக அவலங்களும்... அதற்கான தீர்வுகளும்...
 
பங்கேற்போர்: குவைத் வாழ் தமிழ் மக்கள்
 
கருத்தரங்க விதிமுறைகள்:
  • குவைத் வாழ் தமிழ் மொழி பேசும் ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • வயது வரம் கிடையாது.
  • பெயர் மற்றும் தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்படும்.
  • 5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.
  • சிறப்பாக உரையாற்றும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
  • கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  • முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
  • முன்பதிவு செய்ய கடைசி நாள் : 21.12.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை... இன்ஷா அல்லாஹ்...
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
 
நன்றி! வஸ்ஸலாம்.
 
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_...@yahoo.com / ktic....@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
 
----------------------------
வாரந்தோறும் K-Tic தமிழ் பள்ளிவாசலில்....
 
ஜும்ஆத் தொழுகைக்கு முன் காலை 10 மணி முதல்...
 
1. திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு: திருக்குர்ஆனை முறையாக ஓதுவதற்கும், மனனம் செய்வதற்கும் ஆண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் இலவசமாக நடத்தப்படும் வாராந்திர திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு இது.
 
2. மார்க்க விளக்க வகுப்பு: வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், வாழ்வியல் நடைமுறைகள், பிரார்த்தனை(துஆக்)கள் மற்றும் இறைநினைவு(திக்ரு)கள் ஆகியவற்றை தெளிவான முறையில் கற்றுக் கொடுக்கும் கல்வியகம் இது.
 
ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு...
 

1. சிறப்பு சொற்பாழிவுகள்... வாரந்தோறும் சங்கத்தின் உலமா பெருமக்கள் சமயம், சமூக கட்டமைப்பு, சமுதாய முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி.
 
2. மார்க்க விளக்க நிகழ்ச்சி: வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், வாழ்வியல் நடைமுறைகள், பிரார்த்தனை(துஆக்)கள் மற்றும் இறைநினைவு(திக்ரு)கள் ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவான முறையில் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி இது.
 
3. வாரந்தோறும் வசந்தம்... ஒவ்வொரு வாரமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்குள் சரியான பதிலை நேரிடையாகவோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். வாரந்தோறும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்(நபிமொழி)கள் உள்ளே புதைந்து கிடைக்கும் துஆக்கள், திக்ருகள், வரலாற்று நாயகர்கள் போன்றவற்றை பொதுமக்கள் தாங்களாகவே தோண்டியெடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கும்.
 
4. வேலைவாய்ப்பு தகவல்கள் அறிவிப்பு... வேலை தேடுவோருக்கும், வேலை அளிப்பவருக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் ஓர் இணைப்புப் பாலம்.
 
5. மரணச் செய்தி அறிவிப்பு.. குவைத்தில் மரணத்தைத் தழுவும் நம் சமுதாய சகோதர, சகோதரிகள் குறித்த அறிவிப்பு 
 
6. மரணமடைந்தவர்கள், நோயாளிகள், கடனாளிகள், அல்லல்படுவோர் போன்றோருக்கான சிறப்பு துஆ மஜ்லிஸ்.
 
வெள்ளிக்கிழமைகளின் பொன்னான நேரங்களை சமுதாய மக்கள் பயனடையும் முறையில் செலவழிக்க நமது சங்கம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றது இன்ஷா அல்லாஹ்...
-------------------

K-Tic தமிழ் பள்ளிவாசலில்... ஸுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் / ஆலிம் பெருமக்களின் சொற்பாழிவு DVDக்கள், திருக்குர்ஆன் அரபி மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு DVDக்கள், அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவீ (ரஹ்) அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், இனிய திசைகள், நர்கிஸ், சிந்தனைச் சரம், சமநிலைச் சமுதாயம், சமூக நீதி முரசு மாத இதழ்கள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய நூல்கள் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82
Official Website : www.k-tic.com
K-Tic Open Talk 2012 Notice.jpg
K-Tic Open Talk 2012.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages