பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
ஆங்கிலம் / ஹிஜ்ரீ தேதிகள், இஸ்லாமிய முக்கிய தினங்கள் குவைத் அரசாங்கம் மற்றும் குவைத் இந்திய தூதரக விடுமுறை தினங்கள் போன்றவற்றுடன் தமிழ், அரபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் உள்ளடக்கிய பெரிய அளவிளான வண்ண நாட்காட்டி(Calendar)யை வருடந்தோறும் வெளியிட்டு குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும்.
அந்த வகையில், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 21.12.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் 2013ம் ஆண்டிற்கான வருட நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் நாட்காட்டியை வெளியிட சங்கத்தின் ஆலோசகர்களும், சமூக நல ஆர்வலர்களும், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நாட்காட்டி குறித்த விபரங்களை விளக்கியதுடன், இந்த நாட்காட்டி வெளிவருவதற்கு உதவிய விளம்பரதாரர்கள், வடிவமைப்பாளர், அச்சக உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அல் ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் சங்க நிர்வாகிகள். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 700க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் 2013ம் ஆண்டு நாட்காட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
குவைத்தில் வசிப்பவர்கள் K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலிலும், விளம்பரதாரர்கள் நிறுவனங்களிலும் இந்த நாட்டிகாட்டியை பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
-----------------------------------------------------------------------------------------------------
செய்தி:
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.