குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்
8ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!
பேராசிரியர் மவ்லவீ மு.ஸதீதுத்தீன் பாகவீ சிறப்புரை!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த எட்டு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், இம்மாதம் (ஜனவரி, 2013) 23ந் தேதி முதல் 27ந் தேதி வரை 8ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்...
தொடர்ந்து....
- 5 நாட்கள்!
- 6 இடங்கள்!
- குவைத்தில் முதல்முறையாக 'சுழலும் சொல்லரங்கம்'!
- சிறப்பு இஸ்லாமியப் 'பட்டிமன்றம்'!
- 'சிறப்புச் சொற்பாழிவு'கள்!
- K-Tic பிறை செய்திமடல் - 'ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர்' வெளியீடு!
- குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் 'வாழ்த்துரை'கள்!
- குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின் 'கருத்துரை'கள்!
- பிற அமைப்பு பிரதிநிதிகளின் சிறப்புக் 'கருத்தரங்கம்'!
- பிற சமய சகோதரர்களுக்கான சிறப்பு 'ஆய்வரங்கம்'!
- 'மக்கள் கருத்தரங்கம்' நிகழ்ச்சிக்கான 'பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி'!
- ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்புப் போட்டிகளில் வெற்றியடைந்தோருக்கு 'பரிசளிப்பு நிகழ்ச்சி'!
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.
நிகழ்ச்சியின் முழு விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அண்ணல் நபியின் அழகிய வாழ்வினை அள்ளிப் பருக...
அனைவரும் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வருக!
அன்பர்களையும், உறவினர்களையும் அழைத்து வருக!!
அல்லாஹ்வின் அளவிலா அருள் மழையில் நனைக!!!