குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களின் பாட்டி (தந்தையாரின் தாயார்) ஜனாபா ஜுலைஃகா பீவி அவர்கள் (வயது 90) கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இன்று இரவு (17/10/2013 வியாழக்கிழமை) 11:50 மணி அளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நாளை (18/10/2013 வெள்ளிக்கிழமை) மாலை பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்...
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
(கலீல் பாகவீயின் தந்தையார்)
(கலீல் பாகவீயின் மாமா)
நன்றி! வஸ்ஸலாம்!!