புளியமர திண்ணை

4 views
Skip to first unread message

புளியமர திண்ணை

unread,
Oct 12, 2014, 8:01:07 PM10/12/14
to puliamarat...@googlegroups.com

புளியமர திண்ணை


ஆதிமனிதன் நீ.. இங்கே அடிமைக்கோலத்தில் அலைவது ஏனோ?

Posted: 11 Oct 2014 08:48 PM PDT

தமிழராக பிறந்ததற்க்கு பெருமை கொள்ளுங்கள். இதோ ஒரு மிகச்சிறந்த கள ஆய்வாய்வாளரான ஒரிசா பாலு அவர்களின் நேர்காணல், தென்றலில் இருந்து.

அதிலிருந்து சில துளிகள்

*அதிகபட்சம் ஒரு நாளைக்கு 80 கி மி தொலைவு செல்லக்கூடிய ஆமைகள், ஆரய்ச்சியில் பல ஆயிரம் மைல்கள் பயணிப்பது தெரியவந்தது. ஆமைகள் கடல் நீரோட்டத்தைப்பயன்படுத்துதியே அவ்வளவு தொலைவு பயனித்திருக்கிறது.

*பயணத்தில் ஆமைகள் கரையொதுங்கும் இடங்கள் பெரும்பாலும் துறைமுக நகரங்களாகவே இருந்திருக்கின்றன.

*ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் இந்த துறைமுக நகரங்களில் தமிழரின் நாகரீக, கலாச்சார அடையாளங்கள் காணப்படுகின்றன.

*இந்த துறைமுக நகரங்களின் பெயர்கள் தமிழில் இருக்கிறது.

*லெமூரியா கண்டம் இருந்தது உண்மை. அது சங்ககால இலக்கியத்தில் உள்ள சான்றுகள் மற்றும் இவருன் ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. 

*தெலுங்கு சோழர்கள் என்ற குறிப்பு இந்த கட்டுரையில் உள்ளது. சோழர்கள் திராவிடர்களா? என்ற வினாவிற்க்கு வரலற்றாய்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.


You are subscribed to email updates from புளியமர திண்ணை
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

புளியமர திண்ணை

unread,
Oct 16, 2014, 8:01:06 PM10/16/14
to puliamarat...@googlegroups.com

வாழ்வோம் வாழவைப்போம்

Posted: 15 Oct 2014 09:02 PM PDT

பள்ளி பருவத்தில் நண்பர்கள் பெரும்பாலும் விவசாயப் பின்புலத்திலிருந்த்துதான் வந்திருந்தார்கள்.
சிலர் நிலங்களை வைத்திருந்தார்கள், சிலர் கூலி வேலை செய்யும் குடும்பங்களிருந்து வந்திருந்த்தார்கள். ஆனால் அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்வதில் ஏற்றத்தாழ்வேதுமில்லை. தோட்டத்திலிருந்த்து கொய்யா, நெல்லி என்று ஏதாவது ஒன்றை நம்முடன் பகிர்ந்து கொள்ள அவர்களிடம் எப்போதும் ஏதோ இருந்து கொண்டே இருந்தது. அவர்களுடைய விளைபொருட்களை விற்க்க பெரு நகரங்கலில்லாவிட்டாலும் கிராமங்களைச்சுற்றியுள்ள ஒரு இருந்துகொண்டுதானிருந்த்தது.

நீண்ட நெடிய கடல் பயணம் போல் புயற்காற்று, ராட்சத அலைகள் தாண்டி எங்கெங்கோ கரையொதிங்கி திரும்பிப் பர்க்கையில் ஏறத்தாள நம் நண்பர்கள் அனைவரும் குடியானவன் என்ற பட்டத்தை துறந்திருக்கின்றனர். எல்லோருக்கும் தெரிந்த உலக மயமாக்கல் அள்ளிக்கொடுத்த நம் நண்பர்களை கோவையிலும், திருப்பூரிலும், சென்னையிலும், நியுயார்கிலும் கையேந்த வைத்துவிட்டது. படித்தவரும் படிக்காதவரும் இந்த உலச்சந்தையில் வேறல்ல. எல்லோருமே கூலிக்காரர்கள்தான். சிலர் கழுத்துப்பட்டையுடன், பலர் கழுத்தை நெறிக்கும் கடன் சுமையுடன். அவியல் பொறியியல் படித்து பலர் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடனும், பலர் அந்த வாய்ப்புக்காக பெங்களூரிலும் சென்னையிலும் இராப்பகலாக வேலைசெய்து கொண்டிருக்கின்றனர். 

இன்னோருபக்கம் எப்படியாவது தன்னையும் தனது பிள்ளைகளையும் இந்த சமுதாயம் கைவிட்டுவிடும் என்ற பயத்தில் தோட்டங்காட்டை விற்று, பைன் பூச்சரிலும், ஈமூ கோழியிலும் முதலீடு செய்து, நாளைக்கு நாலுகாசு சேத்தி சனங்களோட சனங்களா இருக்கனும்னு ஆசைப்பட்டு உள்ளதையும் தொலைத்து
கடங்காரனாகவும், திருடனைப்போலவும் ஒளிந்துகொண்டு வாழும் நிலலைக்கு நம் சொந்தங்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.மறுபுறம் பிணத்திற்க்கு காத்திருக்கும் கழுகுகள் போல, ஊருக்குள் உலவிவரும் பெருந்தனக்காரர்கள்-
நலிந்த விவசாயியிடம் ஆசைகாட்டி நிலத்தை வாங்கி பிளாட் போட்டு விற்று பசியாறிக்கொண்டிருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்க்கிடையே கொஞ்சம் நிலம் வாங்கி இயற்க்கை விவசாயம் செய்ய முயற்ச்சித்துக் கொண்டிருப்பவரிடம், தரகர் மூலம் வாங்கிய விலையை விட இருமடங்கு கொடுப்பதற்க்கு ஆள் இருப்பதாகவும், விற்று விட்டால் லாபம் என்றும் ஆசைகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். நிலம் விவசாயத்திற்க்கு வாங்கியது, அது விற்ப்பனைக்கல்ல என்றாலும் விடுவதில்லை. அவர்களால் கொடுக்க முடியாத தொகையை விலையாய்  சொல்லும்போதுதான் நம் பக்கம் வருவதில்லை. ஆனால் இந்த ஆசை வார்த்தைகள் நிச்சயம் குடியானவனை வீழ்த்திவிடும். எந்த விவசாய பின்புலமும் இல்லாமல் அய்யா நம்மாழ்வாரயும், பாலேக்கரையும் பசுமை விகடனில் படித்து இயற்க்கை விவசாயம் பற்றிய ஆர்வம் மிகுதியாகி. கடல் கடந்து சீமயில் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதிலில்லா இன்பம் சேற்று மண்ணில் கால் வைக்கும்போது இருக்கும் என்றும் நம்பும் இந்தத் தலைமுறையினர் அதிகம். சரி, ஏறக்குறைய எல்லோராலும் கைவிடப்பட்டு விட்ட இந்த விவசாயத்தை எப்படி மீட்டெடுத்து மீண்டும் நம் நண்பர்களை முதலாலிகளாகவும் தன்னிறைவடந்தவர்களாகவும் மாற்றலாம் என்ற எண்ணம் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றிய சில யோசனைகள்...

முதலில் விவசாயம் தொழில் முறைப்படுத்தப்படவேண்டும் என்பதில் நமக்கு அதிக தேவை உள்ளது. எப்படி மருத்துவம் சேவையிலிருந்து தொழில் முறைப்படுத்தப்பட்டதோ அந்த அளவில் இல்லாமல் விவசாயியை பாதிக்காத வகையில். 

எப்படி?

பொதுவாக விவசாயத்தில் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, பல காரணிகள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

மண் வளப்படுத்துதல், வரட்சிக்கால சேமிப்பு நிதி, தண்ணீர் மற்றும் மறைமுகச் செலவுகள் பெரும்பான்மையான நேரங்களில் கணக்கிடப்படுவதில்லை. விற்ப்பனை விலை என்பது இவற்றையெல்லாம் சேர்த்தே கணக்கிடப்பட வேண்ட்டும். அப்படியென்றால் விவசாய விளை பொருட்களின் விலை அதிகமாகுமே, எப்படி பொருட்களை விற்றுசேர்த்து காசாக்குவது?

சந்தயை புரிந்து கொள்வது உற்ப்பத்தியை லாபகரமாக்குவதற்க்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 

1.விவசாயப் பொருட்கள் தற்க்காலத்தில் இடைத்தரகர்கள் மூலம் வியாபாரியை சென்றடைந்து பின் அவர்கள் மூலம் மக்களுக்கு சென்றடைகிறது.
2. அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயி மற்றும் தரகர்களிடமிருந்து உணவுப்பொருட்கள் பெறப்பட்டு மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறது.
3. விவசாயிகள் நேரடியாக(?) உழவர் சந்தையில் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.

ஒவ்வொரு வழியிலும் சில நன்மைகளும் பல சிரமங்களும் இருக்கிறது. மேல் சொன்ன அனைத்து முறைகளிலும் விவசாயிக்கு பெரிய லாபத்தை கொடுக்க வில்லை என்பது தான் வரலறு. 

விவசாயிகளின் நண்பர்களான தரகர்களையும் வியாபரிகளையும் தவிர்க்காமல் விவசாயிகள் லாபம் அடைந்து, தொடர்ந்து விவசாயம் செய்து செழிப்பது இன்றியமையாததாகும். இந்த இலக்கை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மற்றும் கடமைகள் ஆராய்வுக்குட்பட்டு சீரமைக்கப்பட வேண்டும்.

இது ஒரு ஒருங்கினைந்த அமைப்பு ரீதியான மாற்றம் மற்றும் முன்னெடுப்புகள் மூலமாக நிறைவேற்றுவது தான் பயனைத்தறும். இங்கு நாம் ஏற்க்கனவே உள்ள அரசு மற்றும் அதன் அமைப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்க்கான மாற்றம் மிகப்பெரிய அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்கள் மூலமே சாத்தியம். அவை நீண்ட தொடர் முயச்சிக்குப்பின் நிகழக்கூடியவை. நிச்சயம் அந்த முயற்ச்சி தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஆனால் அது நமக்கு உடனடி விழைவை தரப்போவதில்லை.

கூட்டுறவு சங்கங்கள் நிச்சயம் விவசாயிகளுக்கு கடந்த காலங்களிலும் தற்ப்போதும் பல்வேறு உதவிகள் செய்துவருகிறது. அந்த அமைப்பை எவ்வாறு நமது முயற்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வதென்பது தனியாக ஆராயப்படவேண்டும்.
முதலில் தற்போதய விவசாய சிக்கலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது விலை நிர்ணய உரிமை. அது ஏன் விவசாயிகள் கயில் வரக்கூடாது என்பதற்க்கான அழுத்தமான காரணங்கள் தெரியவில்லை. சிறிய விவசாயிகளாக அரசு மற்றும் வியாபாரிகள் முன் பலமிழந்து நிற்க்கும் போது நிச்சயம் இது எதிர் பார்க்கப்படவேண்டிய ஒன்றே. இதை தவிற்க்க விவசாய உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அரசியல் சாராத அந்த அமைப்பு ஒரு சங்கிலிதொடர் வழங்களுகான கட்டமைப்புகளுடன் தரகர்களையும் மொத்த வியாபரிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுமுற்றிலும் விவசாயிகளையும் அவர்களின் பங்காளிகளான தரகர்களையும் மொத்த வியாபரிகளையும் உள்ளடக்கிய ஒரு சமுதாய நிறுவனமாக இருக்க வேண்டும். எப்படி பால் மற்றும் சிமெண்டு கம்பெனிகள் சந்த்தை நிலவரத்திற்க்கேற்ப்ப விலையய் நிர்னயித்துகொள்கிறதோ அது போல இந்த அமைப்பிற்க்கும் சுதந்திர அதிகாரம் படைத்திருக்க வேண்டும்.

இது மிகப்பெரிய முயற்ச்சிதான். ஆனால் சரியான திட்டமிடலுடன் அனைவரின் பங்களிப்புடன் இது சாத்தியமே. முதலில் ஒரு சிறிய மாதிரியுடன் செயல்படுத்தி இந்த முயற்ச்சியின் நடமுறைச்சிக்கல்களை தெரிந்து கொண்டு அதற்க்கான தீர்வுகளுடன் விரிவு படுத்தப்படவேண்டும்.
இந்த முயற்ச்சியில் நிச்சயம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். பொறியியல் முதல் வணிகம் படித்தவர் வரை அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ள முடியும்.

உற்ப்பத்தி, விற்ப்பனையோடு நிறுத்திக்கொள்ளாமல் மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்புகளும் வளர்ச்சிக்கு ஏற்ப்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறிய உதாரணம்

சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுப்பயிர்களை உற்ப்பத்தி செய்வதுடன் அவற்றின் மூலம் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளை பாரம்பரிய வழிமுறைகளில் செய்து அவற்றிற்க்கான சிறப்பு உணவகங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்க்கே சென்று நேரடி விற்ப்பனை செய்யாலாம். அதற்க்கு சந்தா போன்ற எளிமையான முறைகளை பயன் படுத்திக்கொள்ளலாம். மாதம் குறிப்பிட்ட தொகைக்கு தினமும் குறிப்பிட்ட காய்கறிகளில் குறிப்பிட்ட அளவு வினியொகிக்கலாம்.

ஒரு நகரத்தின் அருகாமையிலுள்ள கிராமங்கள் இதை எளிதாக செய்திட முடியும். 

முற்றிலும் இயற்க்கை சார்ந்த விவசாய உற்ப்பத்திமுறை மற்றும் உள்ளூர் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் காரணிகளை முதன்மை நோக்கமாகக்கொண்டு இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

சவால்கள்

நடமுறைச்சிக்கல்கள் எப்போதுமே ஒரு மாற்றத்தை கொண்டுவரும்போது கூடவே வரும் என்பது நிதர்சனம்.

முதலீடு மிகவும் பெரிய சவலாக இருக்கும். ஆனால் அதை கூட்டு பங்களிப்புடன் செய்து முடிக்க முடியும். 

அடுத்ததாக விவசாயிகளின் இயற்க்கை சார்ந்த அறிவை மேம்படுத்த அறிவியல் மற்றும் பாரம்பரிய முறைகளுடன் கூடிய ஒரு தகவல் பரிமாற்ற ஒழுங்கை ஏற்ப்படுத்தவேண்டும். அமைப்பின் அங்கத்தவருக்கு நவீன தொலை தொடர்பு கருவிகள் வழங்குவதுடன் இதை சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும். வானக ஒன்றுகூடல் போன்ற மாதாந்திர ஒன்றுகூடலுடன் இதை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இயற்க்கை வேளான் விளைபொருட்களை ஆய்வு செய்து அவற்றிற்க்கு சான்றிதழ் வழங்குவதோடல்லாமல் அதற்க்கான சந்தையை தயார்படுத்த வேண்டும். இயற்க்கை வேளான்பொருட்கள் நிச்சயம் வேதி விளைபொருட்களைவிட சத்தும் தரமும் அதிகம் என்பதால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இயற்க்கை விலைபொருள் என்ற போலி முகவரியில் சந்தையில் வேதி விளைபொருட்கள் வருவதை தடுத்துக்கொள்ளவேண்டும்.

அமைப்பு ரீதியான, அரசியல் ரீதியான தலையீடுகள் கூட்டுறவு சங்கங்களை போலவோ அல்லது சர்வோதயா போன்ற ஒரு சமூக கட்டமைப்பை எளிதில் உடைத்துவிடக்கூடும். நாம் கட்டமைக்கும் இந்த அமைப்பின் சட்ட திட்டங்கள் அவைகளை கருத்தில்கொண்டு உருவாக்கப்படவேண்டும்.

இயற்க்கையின் மேல் நம்பிக்கையும் திட சங்கல்ப்பமும் கொண்டால் நிச்சயம் வெற்றிகொண்டு விவசாயமும் மருத்துவம், பொறியியல் போன்ற அல்லது அவைகளைவிட அதிக மதிப்பு மிக்க தொழில் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளச்செய்யலாம்.

Reply all
Reply to author
Forward
0 new messages