Regards,
Abdul Haleem
புதுவலசை ஜமாஅத் |
இஸ்லாத்தில் பெண் உரிமை - உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி Posted: 01 Apr 2015 07:50 AM PDT அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் சார்பாக 01-04-2015 புதன்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் புதுவலசை தவ்ஹீத் மர்கஸில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்கள் “இஸ்லாத்தில் பெண் உரிமை” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அந்த உரையில் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், நபிமார்களின் மனைவிமார்களின் வாழ்க்கை வரலாறு, சஹாபிய பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அவர்களின் தியாகங்களை அதாரதுடன் விளக்கமளித்தார்கள். மேலும் தற்போது பெண்கள் மத்தியில் நடைபெறும் கலாச்சார சீரழிவுகள், சினிமா, பாடல்கள், நாடகங்களின் மேல் உள்ள மோகம், தற்போதைய ஆடைகலாச்சாரம். தட்டு, தகடு, தர்ஹா, தாயத்து, மாந்த்ரீகம், பேய், பிசாசு, செய்வினை, சூனியம் பற்றிய தவறான நம்பிக்கை, வட்டி, வரதட்ச்சனை, மாமியார் மருகளுக்கு இடையே எற்படும் பிரச்சனை, பொய், புறம் பேசுதல், தொழுகையை பேனாமல் இருத்தல் போன்ற தவறான நடவடிக்கைகளை சுட்டிகாட்டினார்கள். இறுதியில் இது போன்ற தீமைகளால் இவ்வுலகத்திலும் மறுமையிலும் எற்படும் தீமைகள், அல்லாஹ்விற்க்கு பயந்து இறையச்சத்துடனும் எவ்வாறு நடப்பது எனவும், தனது பிள்ளைகளை எவ்வாறு நபிவழியில் வளர்ப்பது, அவர்கள் மார்க்க கல்வியும் உலக கல்வியும் பெற எவ்வாறு உறுதுணையாக இருப்பது எனவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதால் அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கி ஆண்களை மர்கஸ் வராண்டாவிலும், பெண்களுக்கு மர்கஸ் உள்புறத்திலும் இடங்களை ஒதுக்கி நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடத்தினார்கள். பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதால் மேலும் இது போன்ற பெண்களுக்கான நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்தவும் முடிவு எடுத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...... |
You are subscribed to email updates from Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
அல்ஹம்துலில்லாஹ்
--
--
புதுவலசை ஜமாஅத் குழுமம்
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5:2)
Visit our Website www.puduvalasai.in
Visit the Group: http://groups.google.com/group/puduvalasai?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "Puduvalasai Jamath" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to puduvalasai...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Regards,
Abdul Haleem
புதுவலசை ஆலீம் குடும்பத்தார்கள் வசிக்க புதிய வீடு கட்டும் பணி! Posted: 03 Apr 2015 04:54 AM PDT
நமதூரில் பள்ளிவாசல்களில் ஆலீம்களாக பணியாற்றி வரும் இமாம்கள் நெடுங்காலமாக வாடகை வீட்டில் தான் வசித்து வந்தனர். தற்போதுள்ள விலைவாசி கடுமையாக உயர்ந்ததின் காரணமாக இமாம்களின் சம்பளத்தை உயர்த்துவது அல்லது வாடகையை ஜமாஅத் நிர்வாகமே கொடுப்பது போன்ற பிரச்சனைகள் பல வருடமாக நடைபெற்று வந்தது. தற்போது சித்தார்கோட்டையை சார்ந்த தஸ்தகீர் அவர்கள் இமாம்கள் தங்குவதற்க்கு வீடுகட்டி தர முன் வந்ததால், புதுவலசை கே.கே.எ.ஸ் சேக்தாவூது குடும்பத்தாரல் புதுவலசை ஜமாஅத்திற்க்கு வக்பு செய்யப்பட்ட புதுவலசை மஸ்ஜிதுல் அக்பர் தெருவில் உள்ள இடத்தில் தற்போது கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த வீடுகள் கட்ட உதவிகள் செய்த சித்தார்கோட்டை தஸ்தகீர் மற்றும் புதுவலசை கே.கே.எ.ஸ்.சேக் தாவூது குடும்பத்தார்களுக்கு puduvalasai.in சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதுபோன்ற பணிகளை முன்னெடுத்துச்சொல்ல புதுவலசை மக்களையும், ஜமாஅத்தையும் கேட்டுக்கொள்கிறோம்
|
மறுமை வாழ்வுக்கு துவா செய்வோமாக! Posted: 03 Apr 2015 04:19 AM PDT
வியாழக்கிழமை இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு, கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைக¢கு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது. அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர். இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின் ரோடு சேடபட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. பால் டேங்கர் லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குவாலிஸ் காரில் சென்ற கார் டிரைவர் மோகன் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். இந்த விபத்தில் கார் முன்பகுதியில் டிரைவர் மோகன் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் ஒரு கை இல்லாமல் மீட்டனர். மேலும் பலருக்கு கால், கை துண்டாது. தலையில் பலத்த காயமடைந்து உடல் சிதறி பலியானார்கள். பலியானவர்களின் உடல்கள் மற்றும் சதைகள், மூளைகள் சிதறி கிடந்தது. தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப்பட்டியில் உள்ள அரபி கல்லூரியில் படிக்கும் இவர்கள், கொடைக்காணலில் உள்ள ஒரு புது வீட்டில் பாத்தியா தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. இறைவா!அவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக அவரகளை இழந்துவாடும் குடும்பத்தார்களுக்கு அருள்புரிவாய்! இறைவா!இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!இவரைகளை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! |