Fwd: புதுவலசை ஜமாஅத்

21 views
Skip to first unread message

Abdul Haleem

unread,
Apr 7, 2015, 1:54:00 AM4/7/15
to Puduvalasai (yahoo group), pvs

news updates

Regards,
Abdul Haleem

---------- Forwarded message ----------
From: "Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்" <noreply+...@google.com>
Date: 6 Apr 2015 22:25
Subject: புதுவலசை ஜமாஅத்
To: <hal...@gmail.com>
Cc:

புதுவலசை ஜமாஅத்


கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

Posted: 05 Apr 2015 11:40 PM PDT

 

கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!

ஜாஃபர் நிஷா பின்த் ஷேக் ஃபரீத்

il 570xN.306018975
அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள இந்த தொழுகையை முஸ்லிம்களில் பலர் புறக்கணித்து வருகின்றனர். சிலர் பெயரளவில் இந்தத் தொழுகையைத் தொழுது வருகின்றனர். பிறருக்குக் காட்டுவதற்காகவும் கவனமில்லாமலும் தொழும் இத்தகைய தொழுகையாளிகளை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டிக்கிறான். தொழுகையை புறக்கணிப்பது எப்படிப் பாவமோ தொழுகையில் பொடு போக்காக இருப்பதும் பாவம் தான்.

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை . தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (திருக்குர்ஆன். 107: 1-7)

அநாதையை விரட்டுவோரும் ஏழைக்கு உணவளிக்க தூண்டாதவர்களும் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்களும் மறுமையை நம்பாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் கவனமில்லாமல் தொழுவோருக்குக் கேடு தான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இன்று பலர் தொழுகையில் நின்றாலும் அவர்களின் கவனெல்லாம் வேறு எங்கோ இருக்கும். வெறுமனே குனிந்து நிமிர்வது மட்டுமே தொழுகை என்று இவர்கள் நினைக்கின்றனர். இன்னும் சிலர் தொழுகையிலேயே தூங்குவார்கள். தொழுகையில் என்ன ஓதிக் கொண்டிருக்கிறோம்? எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் தொழுவோரும் உண்டு.

பொருள் தெரியாமல் ஓதினாலும் திருக்குர்ஆனுக்கு நன்மை உண்டு என்றாலும் அதையும் முறையாக ஓதுகிறோமா? வேக வேகமாக ஓதி விட்டு வேக வேகமாக ருகூவு, ஸஜ்தா செய்து விட்டு தொழுகையை நிதானமின்றி முடித்து விடுகிறோம். இது எப்படி இறைவனால் ஏற்கப்படும்? என்பதை நாம் சிந்திப்பதில்லை.

ஒரு நேரம் தொழுவது, ஒரு நேரம் தொழாமல் இருப்பது என்று தொழுகையைத் திருடுவோரும் இருக்கிறார்கள். இந்தத் தொழுகையில் என்ன பயன் இருக்கிறது? இப்படிப்பட்ட கவனமற்ற தொழுகையாளிகளுக்கு நன்மைக் கிடைக்காது, கேடு தான் ஏற்படும் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.

மேலும் இத்தகைய தொழுகை நயவஞ்சகத்தின் அடையாளம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரித்துள்ளார்கள்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன். 4:132)

ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (657)

தொழுவதற்கு நேரமில்லை என்று சொல்லி லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய நான்கு தொழுகைகளையும் வேண்டுமென்றே விட்டு விட்டு மொத்தமாக இரவில் களா என்ற பெயரில் சிலர் தொழுது வருகின்றனர். இதுவும் தொழுகையில் பொடுபோக்காக இருப்பது தான்.


நாம் நினைத்த நேரத்தில் தொழுவதற்காக இறைவன் தொழுகையைக் கடமையாக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.

நாம் நம்மையறியாமல் தூங்கி விட்டாலோ மறந்து விட்டாலோ நினைவு வந்தவுடன் விட்ட தொழுகையைத் தொழுவது தான் களாவாகும். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள். வேண்டுமென்று தொழுகையை விடுவது களாவாகாது. தொழுகையைப் பாழாக்குவதாகத் தான் ஆகும்.

தொழுகையில் பொடுபோக்காக இருப்பதே பாவம் என்றால் அறவே தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தொழ நேரமில்லை, சுத்தமாக இல்லை என்றெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தொழுகையைப் பலர் புறக்கணிக்கின்றனர்.
டி.வி பார்க்கவும் சினிமாவுக்கு போகவும் ஊர் சுற்றவும் புறம் பேசவும் பொருளாதாரம் திரட்டவும் பல மணி நேரங்களை செலவளிக்கும் நாம் தொழுகைக்காக மட்டும் நேரம் இல்லை என்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா?
இவ்வுலகில் காற்று மழை, உணவு, மலைகள், சூரியன், சந்திரன் என அனைத்தையும் நாம் அனுபவிப்பதற்காக படைத்த இறைவன், அவனை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்திருக்கிறான். இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் இனி வரும் காலங்களிலாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பதைத் தவிர்த்து உள்ளச்சத்துடன் தொழுவோம். சுவர்க்கத்தைப் பெறுவோம்!

குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள்.  (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்க ளிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்). எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை அவர்களுக்குப் பயன் தராது . (அல்குர்ஆன். 74:40-48)

135 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வருகிறது: தந்தியை தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா!

Posted: 05 Apr 2015 11:13 PM PDT

imagesதந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர்  வரலாறு முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக  வழக்கொழிந்தது. தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக  எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை  கைவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும்  பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.

தற்போது தபால் நிலையங்களை பணம் வினியோகிக்கும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள எலெக்டரானிக் மணி ஆர்டர்  முறை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது  தந்தியைத் தொடர்ந்து படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் முறையை  முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து தபால்துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார் கூறுகையில், தற்போது உடனடியாக பணத்தை பெறும்  வகையிலான எலெக்ட்ரானிக்  மணியார்டர் முறை புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும்  மணியார்டர் முறைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல் துறை ஆலோசித்து  வருகிறது என்றார். நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டுவாடா செய்யும்  நடைமுறை செயல்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

MoneyOrderForm

You are subscribed to email updates from Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States

Abdul Haleem

unread,
Apr 9, 2015, 1:05:59 AM4/9/15
to Puduvalasai (yahoo group), pvs

Regards,
Abdul Haleem

---------- Forwarded message ----------
From: "Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்" <noreply+...@google.com>
Date: 8 Apr 2015 22:36
Subject: புதுவலசை ஜமாஅத்
To: <hal...@gmail.com>
Cc:

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்!

Posted: 08 Apr 2015 12:40 AM PDT

 

Virus

ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன.

அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத் தருகின்றது. மரம் தான் வளர்ந்து விட்டதே! அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்று ஓர் ஏகத்துவவாதி எண்ணினால் அவர் நிச்சயமாக ஏமாந்து விடுகின்றார். தான் ஈடுபட்ட தியாகத் திருப்பணியில் ஈடுகட்ட முடியாத நஷ்டவாளியாகி விடுகின்றார்.

பூச்சிகள், புழுக்கள் போன்றவை சிறு செடி கொடிகளைத் தான் தாக்கும்; பெரும் மரங்களைத் தாக்காது என்று நினைத்துவிடக் கூடாது. படர்ந்து, விரிந்து நிற்கின்ற பலமான மரத்தைக் கூட வைரஸ் தாக்கி பட்ட மரமாக்கி விட்டிருக்கின்றது.

தவ்ஹீது பாதை என்பது நேரிய, நெடிய பாதையாகும். அந்தப் பாதையின் இறுதி இலக்கை அடைகின்ற வரை ஷைத்தான் ஒரு தவ்ஹீதுவாதியைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நிற்பான். இதைக் கீழ்க்காணும் வசனத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

"நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிக மானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).

அல்குர்ஆன் 7:16, 17

ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய மாத்திரத்தில், தவ்ஹீது மக்களை வழிமறித்துக் கொண்டு செல்வதற்காக ஜிஹாத் என்ற பெயரில் விடியல் வெள்ளியினர் உள்ளே நுழைந்து வழிகெடுத்தனர். ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தனர். இதற்குப் பதிலடி கொடுத்து அந்த வைரஸ்களிடமிருந்து ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். இன்றும் அந்த விஷக்கிருமிகள் பிரண்ட், பேக் என பல்வேறு பெயர்களில் வந்து தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அஹ்லுல் குர்ஆன் என்ற விஷக் கூட்டம் முளைத்து, குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று வாதிட்டனர். அந்த வைரஸ்களை விட்டும் அல்லாஹ்வின் அருளால் மக்களை மீட்டெடுத்தோம்.

சர்வதேசப் பிறை என்ற ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மூலம் ஒரு வைரஸ் தாக்குதல் வந்தது. அல்லாஹ்வின் கிருபையால் அதை விட்டும் இந்த ஜமாஅத்தைக் காப்பாற்றினோம். அதுவரை ஜாக் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருந்த நம்மை, அதை விட்டும் பிரிக்கும் மையப்புள்ளியாக இந்த ஜோதிடப் பிறை கணிப்பு அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

நாம் வளர்த்த தமுமுகவே நம்மை அழிப்பதற்கான வைரஸாக மாறியது. சளைக்காமல், சடையாமல் அதிலிருந்தும் ஜமாஅத்தைக் கரை சேர்த்தோம்.

இப்போது ஸலஃபு என்றொரு வைரஸ் தோன்றியுள்ளது. இதனால் ஜமாஅத்திற்கு நேரடிப் பாதிப்பு இல்லையென்றாலும் ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் மதரஸாக்களை அமைத்துக் கொண்டு, அவர்களிடம் சிறு வயதிலேயே விஷத்தை விதைத்து, வருங்கால தலைமுறையை வழித்தடம் மாற்றும் வேலையில் இந்த ஸலஃபுகள் இறங்கியுள்ளனர்.

இன்று நமது ஜமாஅத்தின் கிளைகளில் பெண்கள் மதரஸாவை நிறுவுவதில் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில் 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்ததும் தங்கள் பெண் மக்களை மேற்படிப்பு படிக்க அனுப்புவதற்கு மக்கள் கடுமையாக அஞ்சுகின்றனர். அதனால் பட்டப் படிப்பெல்லாம் தேவையில்லை, நமது பெண்மக்கள் ஆலிமாக்களாக வரட்டும் என்று அவர்களை மார்க்கக் கல்வி படிப்பதற்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குக் கல்வி கொடுக்கின்ற கல்வி நிலையங்கள் அவசியம் தேவை தான். அதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நமது மழலைகள், சந்ததிகள், வருங்காலத் தலைமுறைகள் நாளை நம்முடன் சுவனத்தில் நுழைவார்கள்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம்.

அல்குர்ஆன் 52:21

நம் சந்ததிகளுக்கு ஏகத்துவக் கொள்கையை சரியாகப் போதிக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் போய்ச் சேர்ந்து விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எனவே அந்தச் சின்னஞ்சிறு தளிர்களை தவ்ஹீத் வார்ப்பில் வளர்க்கவும் வார்க்கவும் வேண்டும். அதற்குச் சரியான களமும் தளமும் காலை, மாலையில் நடத்தப்படும் மக்தப் மதரஸாக்கள் தான்.

இன்று தமுமுக, விடியல் வெள்ளி போன்ற அமைப்பினர் தவ்ஹீத் ஜமாஅத் செய்கின்ற வேலைகள் அத்தனையையும் கையில் எடுக்கின்றனர். அவர்கள் காலை, மாலை மக்தப்களையும், பெண்கள் மதரஸாக்களையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத இந்தத் துறையில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் மறுமை அல்ல!    ஈ கூட எட்டிப் பார்க்காத தங்கள் ஆர்ப்பாட்ட, போராட்டக் களங்களுக்கு மக்களை வினியோகம் செய்யும் கருவூலமாக, களஞ்சியமாக இந்தத் துறைகளைப் பயன்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயல்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது.

இந்தத் துறையில் இவர்கள் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம் மார்க்கப்பணி என்றால் அதில் காசு, பணம் பார்க்கலாம். வசூல் வேட்டை நடத்தலாம். அதற்காக இந்த முகமூடியைக் கையில் எடுத்துள்ளனர்.

என்ன தான் இவர்கள் நமது பாதையில் குறுக்கிட்டாலும் அல்லாஹ்வின் அருளால் நமது வளர்ச்சிப் பணி அசாதாரணமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ். இதற்குக் காரணம் நம்முடைய மைய நோக்கமே மறுமை மட்டும் என்பது தான்.

இட ஒதுக்கீடு என்ற சமுதாய நோக்கத்திற்காகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தோம். அதையும் தற்போது அற்று, அறுத்து எறிந்து விட்டோம். மறுமையை மட்டும் உயிர் மூச்சாக ஆக்கிக் கொண்டோம். கொள்கை என்ற விளக்குடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வோம்.

இந்தப் பயணத்தின் போது நமது தலைமுறையினரையும் அழைத்துச் செல்வதற்கு, காலை, மாலை நேர மதரஸாக்களில் கவனம் செலுத்துவோம். இதுதவிர மற்ற நேரங்களில் குறிப்பாக மக்ரிப், இஷா நேரங்களில் வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கான மதரஸாக்களை நடத்துவோம். இந்த மதரஸாக்கள் தான் கொள்கை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

நம்மை மட்டும் நரகத்தில் இருந்து காப்பது நமது லட்சியமல்ல! நமது சந்ததிகளையும் சேர்த்து நரகத்திலிருந்து காப்பதே நமது லட்சியமாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தின் ஆணைப்படி, நம்மையும் நமது சந்ததிகளையும் நரகத்திலிருந்து காப்போமாக!

http://www.onlinepj.com/egathuvam/2015-ega/-2015-/#.VSTZC_CRbYh

Faisal.N

unread,
Apr 9, 2015, 5:00:28 AM4/9/15
to puduv...@googlegroups.com, Puduvalasai (yahoo group)
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

வழக்கமான அதே பல்லவி தான். புதிதாக ஒன்றும் இல்லை. வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்ங்க.....

####இன்று தமுமுக, விடியல் வெள்ளி போன்ற அமைப்பினர் தவ்ஹீத் ஜமாஅத் செய்கின்ற வேலைகள் அத்தனையையும் கையில் எடுக்கின்றனர். அவர்கள் காலை, மாலை மக்தப்களையும், பெண்கள் மதரஸாக்களையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத இந்தத் துறையில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் மறுமை அல்ல!    ஈ கூட எட்டிப் பார்க்காத தங்கள் ஆர்ப்பாட்ட, போராட்டக் களங்களுக்கு மக்களை வினியோகம் செய்யும் கருவூலமாக, களஞ்சியமாக இந்தத் துறைகளைப் பயன்படுத்த முனைகின்றனர். இவர்களின் செயல்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது.####

2015 -ன் நம்பர் ஒன் காமெடி......ஹாஹஹஆஹா.....

#####ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.#####

பெண் குற்றசாட்டுகள் அதிகம் உள்ள இயக்கத்தின் சர்வே ஒன்று நடத்த வேண்டும்.......உண்மை விளங்கும்...

####இந்தத் துறையில் இவர்கள் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம் மார்க்கப்பணி என்றால் அதில் காசு, பணம் பார்க்கலாம். வசூல் வேட்டை நடத்தலாம். அதற்காக இந்த முகமூடியைக் கையில் எடுத்துள்ளனர்.####

சகோ. சைபுல்லா, பாக்கர், செங்கிஸ்கான், அப்பாஸ் அலி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டு. சூப்பர்........

####இட ஒதுக்கீடு என்ற சமுதாய நோக்கத்திற்காகத் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தோம். அதையும் தற்போது அற்று, அறுத்து எறிந்து விட்டோம். மறுமையை மட்டும் உயிர் மூச்சாக ஆக்கிக் கொண்டோம். கொள்கை என்ற விளக்குடன் இலக்கை நோக்கிப் பயணம் செய்வோம்.####

இது எப்ப..... சொல்லவேயில்ல. இது புதுசா இருக்கு. அடுத்த எலக்சன்ல பாப்போம். இடையில மாறுனாலும் மாறும். அவசரப்படாதீங்க.....

வைரஸ்கல் யார் என்று சமூகம் தெளிவாக விளங்கி வைத்திருக்கின்றது.

அன்பு சகோதரர்களே !!!

உங்களது இயக்கத்தை வளர்ப்பதற்கு நீங்கள் செய்யும் பணிகளை எடுத்து சொல்லி, கொள்கை பிரகடனம் செய்து வளர்க்கப்பாருங்கள். அடுத்தவர்களை அவதூறு சொல்லியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று எண்ணாதீர்கள். மரணமும், மறுமையும் நெருங்கி கொண்டிருக்கின்றது.

எனக்கு தெரிந்து மக்தப் என்னும் காலை, மாலை மதரஸாக்களில் தான் நான் மார்க்க கல்வி பயின்றேன். அது என்னுடைய தலைமுறையில் உருவாக்கப்பட்டது அல்ல. நான் நன்கு அறிவேன். பல நூறு ஆண்டுகல் அவை நடந்தேறி கொண்டிருக்கின்றன. இன்றைய நவீன உலகில் தங்கள் குழ்ந்தைகளை மேதைகலாக்க நினைக்கும் பெற்றோர்கள் செய்யும் தவறினால் மதரஸாக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. அதை நிவர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு இன்றை தாய் மார்களுக்கு தேவை.

மக்தபுகள் இன்றும் தனது பணியை திறம்பட செய்து வருகின்றது. இதற்கு உரிமை நாம் கொண்டாட முடியாது.

 
وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖوَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

visit our website : http://puduvalasai.tk/

BEST REGARDS
Faisal.N



--
--
புதுவலசை ஜமாஅத் குழுமம்
 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5:2)
 
Visit our Website www.puduvalasai.in
Visit the Group: http://groups.google.com/group/puduvalasai?hl=en

---
You received this message because you are subscribed to the Google Groups "Puduvalasai Jamath" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to puduvalasai...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


Abdul Haleem

unread,
Apr 12, 2015, 3:36:50 AM4/12/15
to pvs, Puduvalasai (yahoo group)

Regards,
Abdul Haleem

---------- Forwarded message ----------
From: "Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்" <noreply+...@google.com>
Date: 11 Apr 2015 22:35
Subject: புதுவலசை ஜமாஅத்
To: <hal...@gmail.com>
Cc:

கற்பா? கல்லூரியா?

Posted: 11 Apr 2015 09:54 AM PDT

 

7da65258a8b16c8941a4bbc93a2d151a

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

ஆட்டோ அல்லது வேன் பயணம்


 சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, கார், பஸ் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

 ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள்  நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

 வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.


பாடமா? படமா?


உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?


பிற மதத்தவருடன் காதல் பயணம்


கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)


ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்


இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

 'கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

நன்றி
ஏகத்துவம்

Abdul Haleem

unread,
Apr 15, 2015, 1:35:27 AM4/15/15
to Puduvalasai (yahoo group), pvs

Regards,
Abdul Haleem

---------- Forwarded message ----------
From: "Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்" <noreply+...@google.com>
Date: 14 Apr 2015 22:41
Subject: புதுவலசை ஜமாஅத்
To: <hal...@gmail.com>
Cc:

ஐந்து வேளை தொழுபவர்களுக்கே இனி திருமண உதவித்தொகை!சவுதி அரசு புதிய நிபந்தனை!

Posted: 14 Apr 2015 07:58 AM PDT

KSA cpl

செல்வ வளம் மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும். இதற்கு வழியில்லாமல் சற்று கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களின் திருமண செலவுக்கு தேவையான தொகையை சவுதி அரசின் சமூக நலத்துறை அமைச்சகம் அளித்து வருகின்றது.

இந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டு துறைக்கு சவுதியில் உள்ள 21 தொண்டு நிறுவனங்கள் இதற்கான பரிந்துரைகளை அனுப்பி வைக்கின்றன.

மணமகனின் குடும்பச் சூழல், குணநலன், நன்னடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள், தகுதிக்குரிய இளைஞர்களுக்கு திருமண உதவித்தொகையை இதுவரை வழங்கி வந்தனர்.

இந்நிலையில், இந்த தொகையினைப் பெற விரும்புவர்கள் ஐந்து வேளையும் தவறாமல் தொழுகை நடத்துபவரா? என அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மசூதியின் தலைமை இமாமிடம் இனி சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை வழங்கும் அதிகாரம் தலைமை இமாம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மசூதிகளுக்கு விண்ணப்பதாரர் வேளை தவறாமல் சென்று தொழுகை நடத்துகின்றாரா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி மனு செய்யும் அனைவருக்குமே உதவித்தொகை கிடைத்து விடுவதில்லை. இருப்பினும், அரசின் உதவி பெறுபவர்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதன் வாயிலாக நன்னடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் உருவாக்குவதே சவுதி அரசின் நோக்கமாக உள்ளது என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

நன்றி:மாலைமலர்

 

இந்த சட்டம் நம்து ஊரிலும் அமலுக்கு வந்தால் நம்தூர் இளைஞர்களின் நிலமை?!?!?!?!

புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறுவர் சிறுமிகளுக்கான Tuition வகுப்புகள்

Posted: 14 Apr 2015 07:45 AM PDT

அஸ்ஸலாமு அலைக்கும்...

 

IMG-20150414-WA0004

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் சார்பாக அனைத்து வார நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் (Tuition) நடத்தப்பட்டு வருகிறது, 25 க்கும் மேற்ப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு இந்த வகுப்புகள் தினந்தோரும் அல்லாஹ்வின் கிருபையால் பயிற்ச்சிகள் நடந்து வருகின்றது, இந்த வகுப்புகளை சகோ. சமீனுல்லாஹ் மற்றும் சகோ.நிஜாம் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

 

பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள், தமிழ் பாடங்கள், ஆங்கில வகுப்புகள், அவர்களுக்கு புரியாத கணக்குகள், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது, இந்த வகுப்புகளில் சேர்ந்து பயன்பெடுமாறு Puduvalasai.in சார்பாக அனைத்து பெற்றோர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

 

IMG-20150414-WA0005

Reply all
Reply to author
Forward
0 new messages