அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வின் உதவியால், உங்களின் அன்பளிப்புகினாலும் பங்களிப்புகினாலும், ரஹ்மத்
பெண்கள் நல எத்தீம்கானா & மத்ரஸா கட்டிடம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
(போட்டோக்கள் இணைத்துள்ளேன்).
இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் கூரைக்கு கான்க்ரீட் போட்டு விடுவார்கள். அல்லாஹ்வின்
உதவியால் கான்க்ரீட் போட்ட பின் போட்டோக்கள் எடுத்து அனுப்பி வைக்கிறேன்.
உங்களில் சிலர் ரஹ்மத் பெண்கள் நல எத்தீம்கானா & மத்ரஸா மேல் மிகவும் அக்கறை கொண்டு
இதுவரை என்ன வேலைகள் நடைபெற்றுள்ளன இனி என்ன வேலைகள் நடைபெற உள்ளன
என்று கேட்டிருந்தீர்கள்.
அல்லாஹ் உதவியால் நீங்கள் அனைவரும் கொடுத்த ரூபாய் இருபத்தி ஏழு லட்சம் இது வரை
செலவாகி உள்ளது. (கூரைக்கு கான்க்ரீட் போடுவது சேர்த்து).
இதுவரை செலவானது எத்தீம்கானா கட்டிடம் தரை தளம் கட்டுவற்கு மட்டும்தான். இன்ஷா அல்லாஹ்
இனிமேல் உள்ள வேலைகள்தான் அதிகம்.
இன்ஷா அல்லாஹ் இனிமேல் இனிமேல் உள்ள வேலைகள்:
1. எத்தீம்கானா & மதரஸா கட்டிடம், 3300 சதுர அடி தரை தளத்திற்கு உள்பூச்சு வெளிப்பூச்சு
சிமென்ட் பூசுவது, எலக்ட்ரிக், ப்ளம்பிங், டாய்லட் - பாத்ரூம், டைல்ஸ், பெயின்டிங், கதவுகள்,
ஜன்னல்கள் அமைப்பது.
2. சமையலறை & உணவருந்தும் இடம் 1000 சதுர அடி கட்டிடம் கட்டுவதுடன் உள்பூச்சு
வெளிப்பூச்சு சிமென்ட் பூசுவது, எலக்ட்ரிக், ப்ளம்பிங், டைல்ஸ், பெயின்டிங், கதவுகள், ஜன்னல்கள்
அமைப்பது.
ஒரு கட்டிடம் கட்டுவதில், கட்டிடம் மட்டும் ஒரு பங்கு என்றால் மற்ற வேலைகள் இரண்டு பங்கு
செலவு வைக்கும் என்பது உங்களுக்குத்தெரியும்.
செலவு அதிகம் வரும் என்பதால் தரைக்கு டைல்ஸ் தற்போதைக்கு போட விரும்பவில்லை. ஆனால்
சமையலறைக்கும் டாய்லட்-பாத்ரூம்களுக்கும் அவசியம் டைல்ஸ் போடனும்.
அல்லஹ் உதவியால் உங்களில் யாரேனும் நேரில் வந்து பார்த்து விட்டோ அல்லது உங்களில்
யாரையேனும் அனுப்பி பார்க்கச்செய்தோ தரைக்கு டைல்ஸ் போடவோ அல்லது மேற்குறிப்பிட்ட
மீதம் உள்ள வேலைகளை செய்து கொடுப்பதற்கோ பொருளாகவோ பணமாகவோ கொடுத்து
பொறுப்பேற்றுக்கொண்டால் மிகவும் நல்லது.
இவ்வளவு பெரிய இடம் தேவையா என சிலர் யோசிக்கலாம். இன்ஷா அல்லாஹ் எதிர்கால
தேவைகளை யோசித்தும் அரசாங்க உத்தரவுபடி, அரசு அதிகாரிகள், பொறியாளர்கள்
ஆலாசனைப்படிதான் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் 200-250 பிள்ளைகள் வரை தங்க வைத்து, இஸ்லாமிய கல்வி
மற்றும் உலகக்கல்வி பயில வைக்கும் நோக்குடன் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இடவசதி இல்லாத காரணத்தால் நமது எத்தீம்கானா மத்ரஸாவில் சேர இருந்த பல பிள்ளைகளை
சோர்த்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் மாற்றுமத அநாதை இல்லங்களில் தங்கி உலகக்கல்வி
மட்டும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் உதவியால் கட்டிடம் கட்டி முடித்த பின்
அவர்களை நம் எத்தீம்கானா மத்ரஸாவில் சேர்த்து மார்க்கக்கல்வி கற்று கொடுக்கனும்.
உங்கள் பகுதியில் ஏழை, எத்தீமான பிள்ளைகள் இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் வந்தால்
இன்ஷா அல்லாஹ் சேர்த்துக்கொள்வார்கள்.
பணத்தேவை அதிகம் உள்ளது. ஆதலால் உங்களால் எவ்வளவு முடியமோ அதை கீழ்க்கண்ட வங்கி
கணக்கிற்கு அணுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
RAHMATH PENGAL NALA ETHEEMKANA MATHARSA (TRUST)
ADDRESS: 22/11, WARD, NEAR JUMMA MASJID, THEVARAM 625530
THENI DISTRICT, TAMILNADU, INDIA.
CANARA BANK - THEVARAM BRANCH
CURRENT A/C No.1094201000224,
IFSC Code: CNRB0001094 (Used for RTGS and NEFT transactions)
எத்தீம்கானா மத்ரஸாவின் வரவு செலவு கணக்கு விபரங்கள் அவர்களிடம் தெளிவாக உள்ளன.
M.Com. முடித்து M.Phil. படிக்கும் பெண்தான் எழுதிவருகிறார். ஆடிட்டரும் அவ்வப்போய் பார்த்து வருகிறார்.
அருளாலன் அல்லாஹ் நம் அணைவரின் தொழுகைகள், நோன்புகள், ஜக்காத்துகள், ஹஜ்ஜுகள்,
சதகாக்கள், துஆக்கள் அணைத்தையும் ஒப்புக்கொண்டு, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற
செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக.
-
ஆலிமா படிப்பு இந்த வருடம்தான் ஆரம்பித்து உள்ளார்கள். இடம் சிறியதாக உள்ளதால் குறைந்த
அளவு பெண்களே உள்ளனர். இன்ஷா அல்லாஹ் கட்டிடம் கட்டி குடிபோனபின், அதிக எண்ணிக்கையில்
பெண்களை சேர்த்துக்கொள்ள உள்ளனர்.