சுகாதாரமான குடிநீர்

3 views
Skip to first unread message

Faisal.N

unread,
Feb 2, 2015, 1:21:59 AM2/2/15
to puduvalasai, pvs, Thasin, sahab...@hotmail.com, jabi...@hotmail.com, Raja, hal...@gmail.com, el_shahe...@yahoo.com, naze...@yahoo.com, raha...@hotmail.com, basu...@gmail.com
அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் வளாகத்தில் சுகாதாரமான குடிநீர்

நமதூர் அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலை பள்ளிகளின் வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர்(RO) வசதியை ஏற்படுத்தி கொடுக்க EPMA (Emirates Puduvalasai Muslim Association) முடிவு செய்துள்ளது.

EPMA - வின் உறுப்பினர்  சகோ. ராஜா அவர்கள் தாயகம் சென்றிருந்த போது குடி தண்ணீர் வசதி ஏற்பாடு செய்வது சம்பந்தமாக தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். 

இது சம்பந்தமாக டெக்னீசியனை தொடர்பு கொண்டு பேசிய போது Filter System (RO) மூலம் தண்ணீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் ஃபில்டர் இயந்திரத்திற்கு தண்ணீர் செலுத்தப்படும். தண்ணீர் சுத்திகரிக்கப்படும். அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் மற்றொரு தொட்டியில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து மாணவ, மாணவிகள் பருகும் வண்ணம் குழாயின் மூலாம் சுத்தமான குடி தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்தார். 
 
அதே போன்று நமதூர் உயர் நிலை பள்ளிகளின் கழிவரைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. அதனை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று  மாணவ மாணவிகள் முறையாக பயன்படுத்தும் விதமாக மாற்றி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை உடனடியாக நடைமுறை படுத்தம் முயற்சிகளையும், பொருளாதார உதவிகளையும் EPMA சார்பாக வழங்கப்படும்.

நமதூர் முன்னேற்றத்தின் மேல் அக்கரையுள்ள உங்கள் அன்பினாலே இச்சமூக பணிகள் சாத்தியமாயிற்று. அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இப்படிக்கு

EPMA (Emirates Puduvalasai Muslim Association)



 
وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖوَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

visit our website : http://puduvalasai.tk/

BEST REGARDS
Faisal.N
Reply all
Reply to author
Forward
0 new messages