'' ராமன் ஆண்டாலும்.,ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல..!!! "
ஹி., ஹி., ஹி.. ஒண்ணுமில்ல டீ குடிக்கலாம்னு கடைக்கு போனப்ப
அங்கே டிவில இந்த பாட்டு ஓடிட்டு இருந்தது..
டீயை வாங்கிட்டு பாத்தா..
பக்கத்து பெஞ்ச்ல தெரிஞ்ச ஒருத்தரு...
அப்படியே நைசா அவர்கிட்ட பேச்சு குடுத்தேன்...
அவரு எப்ப பாத்தாலும் கட்சி., கட்சின்னே சுத்திட்டு இருப்பாரு.
" தம்பி..! நல்லா இருக்கியா..? "
" நல்லா இருக்கேன்ணே..
ஆமா இப்பவும் கட்சியில் இருகிங்களா ?"
" இல்லேன ரொம்ப பீலிங்கா சொன்னாரு...
கடந்த 5 வருடமா பல சேவைகள் செய்து கிட்டு இருக்கேன்" (எங்கே பொருப்பில்லாமே இருக்கேன்னு சொல்லிவிடுவேனோ என்று)
"அப்போ தனியா தேர்தல்ல நிக்க போறீங்க!?"
"ஆமாண்ணே கொள்கை தான் ......"
" அது ஒரு மேட்டரே இல்லை என்ன காரணத்திற்காக அத விட்டு வெளிய வந்திங்க?"
"நான்தான் அவர தேடி போறேன் அவர் நம்மள தேடி வருவதே இல்லை, ஸ்மார்ட் போன் கேட்டேன் வாங்கிதரலை, உதவிகேட்டேன் செய்யலை."
"இது போதுமே நீங்க உங்களுக்காக கேட்டதே மக்களுக்காகன்னு மாத்திர்வோம். நீங்க என்ன செய்றீங்க.. " மக்களே இத்தனை வருசமா யாராவது உங்கள வந்து பார்த்தாங்கள? உங்கள மதிகிறதே இல்லை மக்களே"(கேப்டன் )
ஸ்மார்ட் போனேஅப்படியே ஸ்ட்ரீட் லைட்ட மாத்திர்வோம் , ஸ்ட்ரீட் லைட்ட வாங்கி போடுங்கள் என்றேன் அவர்கள் வாங்கி கொடுக்கவில்லைன்னு சொல்லுங்க.
உதவி கேட்டேன் செய்யவில்லை என்பது அப்படியே இருக்கட்டும்"
"என்ன உதவி என்று யாரும் கேட்க மாட்டர்களா? "
"அந்த அளவுக்கு இங்கு யாருக்கும் தெளிவு இல்லை அவனுங்கலா ஒன்ன நினைசுகுவாங்க. நீ சொல்ல வர்ரவன இருந்த தான் என்ன என்று சொல்லி இருப்பெயில்லை பழி போடுறவன் எல்லாம் இப்படிதான் பேசுவானுங்க."
"அரசியல்ல இதெல்லாம் சாதாரனம்னே"
"சரி பஞ்சயத் போர்ட் பத்தி எதாச்சும் தெரியுமா?"
"பெரிய பராம்பரியமே இருக்கு 1899 லேயே அதற்க்கு மினிட் எல்லாம் இருக்காம்!!"
"இது பிரிடிஷ் காரனுக்கு தெரியுமா???"
"!!!!??!!??!!!!!!!???"
"ஏன்ன அவன் தான் அப்போ ஆட்சி செய்தான் இந்தியாவை, சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாலேயே புதுவலசையில் பஞ்சயத் போர்ட் (என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா? )
இப்படிதான் அந்த வருடம் அது நடந்துச்சு இந்த வருடம் இது நடந்துச்சு சொல்லணும் யாரும் அதை எல்லாம் கேட்க மாட்டாங்க வருசத்த சொன்ன அதெல்லாம் உண்மையின்னு நம்பிர்வாங்க அவனவனுக்கு ஆயிரத்து எட்டு வேலை, தேர்தலே நிக்கிறீங்க...! வின் பண்றீங்க...! "
டெல்லியில ஆம் ஆத்மி ..............பட் தமிழ் நாட்டுல .....
அம்மா ஆத்மி ....... தமிழண்ட......
ங்கொய்யாலே யார்கிட்ட
2011ல் சித்தர் கோட்டையில் என்ன நடந்திச்சோ அதேதான் புதுவலசைக்கு 2016ல். அதிமுக, திமுக,SDPI, BJP, நம்ம தம்பி அப்புறம் இன்னும் இரண்டு பேர், ( எல்லாம் பன்னுவன்கலாம் ஆனா ஊர் ஒற்றுமைன்னு சொல்லுவங்கலாம்.)
'' ராமன் ஆண்டாலும்.,ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல..!!! " (மறுபடியும் அதே பாட்டா இன்னுமா முடியலே )
by D.Anwar raja