உலகின் பொருளாதார வல்லரசு அமெரிக்காவிலோ, தொழிநுட்ப வல்லரசு ஜப்பானிலோ ஓட்டு எந்திர முறை இல்லை. ஏன் இந்தியாவில் மட்டும்.
கேள்வி கேட்கும் கட்சிகள் எவையும் வந்துவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டுகின்றன பெரிய நிறுவனங்கள்.
உலகத்தில் பல நாடுகள் பழைய நம்பிக்கையான பேப்பர் வாக்கு சீட்டையே பின்பற்றுகின்றனர்.
முக்கியமாக பார்க்க வேண்டியது தொழில்நுட்ப முன்னேற்றம் என்பதைவிட மக்களை என்றுமே ஏமாற்றும் கட்சிகளால் மிக மிக எளிதாக சாமானியனின் வாக்குகள் ஏமாற்றப் படுகிறது என்பதேயே.
மேலும் இந்த இந்த கட்சிகள் வந்தால் தான் தங்கள் தொழில்கள் பாதிக்கப்படாது என்று கோடி கோடியாய் பணத்தை கொட்டும் உள்நாட்டு-வெளிநாட்டு பண முதலாளிகள் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் அவற்றை வழிக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, ஏற்கனவே வழிக்கு கொண்டுவரப்பட்ட கட்சிகளையே தேர்ந்தெடுக்க முயலுகின்றன.
சாதாரண கிரிக்கெட்டு என்கிற விளையாட்டு லேயெ சூதாடும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பணக்கம்பெனிகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சட்ட ரீதியான சிக்கலை உண்டாக்கும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு விளையாட்டு விளையாடும் என்பதை சொல்லத் தேவை இல்லை.
திமுக - ராசா - கனிமொழி - ரத்தன் டாட்டா கூட்டணி
செய்மதியின் தொலைத்தொடர்புக்கான
அலைக்கற்றை இடத்தை இந்திய செய்மதி துறையிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிகவிலைக்கு விற்றது.
இதனால்
இந்தியாவுக்கு இழப்பு 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். காண்க:
அமெரிக்காவின் டைம் (Time, 2011) இதழ் உலகில் நடந்த மிகப்பெரிய 10 ஊழல்களில் 2 வதாக இதனை அறிவித்தது.
காண்க: முதல் ஊழல் 1972 ல் நடந்த அமெரிக்க அதிபர் நிக்சனின் வாட்டர் கேட் (Water gate) ஊழல்.
காண்க:இனி பிரச்சினை இருக்காது பாருங்க...
2. ரிலையன்ஸ் சின் கொள்ளை
கச்சா எண்ணெய் (Crude oil) இந்தியாவில்
1. பாம்பே ஹை (Bombay High),
2. அசாம் மாநிலம் (திக்பாய்),
3. குஜராத், இராஜஸ்தான்
4. ஆந்திரா (கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை)
5. தஞ்சை, நாகை, திருவாரூர் (காவிரி படுகை) ஆகிய இடங்களில்கிடைக்கிறது.
பாம்பே ஹை கடலடி எண்ணெய் துரப்பணம்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் OIL (OIL INDIA LIMITED) போன்றவையும், ரிலையன்ஸ் மற்றும் CAIRNS INDIA (P) LTDஆகிய தனியார் துறைநிறுவனங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன.
கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், கெரசின், LPG, நாப்தா, LSHS, F.O (Fuel oil), கெரசின், போன்ற எரிபொருட்களும், பென்சீன்,டொலுவீன் போன்ற வாசனை வேதிப்பொருட்களும், சிறப்புகொதிநிலை ஸ்பிரிட்டுகளும், பிடுமின் (தார்) போன்ற பயன்பாட்டுபொருட்களும் கிடைக்கின்றன.
இவையனைத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் (Refineries)சுத்திகரிக்கப்பட்டு, எண்ணெய் வணிக நிறுவனங்களால் (IOCL, BPCL, HPCL) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தற்போது 20 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்இயங்கி வருகின்றன. இவற்றில் IOCL, BPCL, HPCL, ONGC போன்றபொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆயில்போன்ற தனியார் துறை நிறுவனங்களும் அடங்கும். ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பு
1. உலகளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்குஜராத் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனமே. காண்க: 7,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த ஜாம் நகர் நிறுவனம்.
2.
அது மட்டுமல்ல எண்ணெய் துறையில் எந்த பொதுத்துறைநிறுவனமும் ரிலையன்ஸ் அனுமதி இல்லாமல் செயல்படமுடியாது.குறிப்பாக பிளாஸ்டிக்,
இராசயனம்,
பெட்ரோலிய உப பொருட்கள்உற்பத்தி மற்றும் விற்பனையில் அவர்கள் இந்திய அளவில்சர்வாதிகார கட்டுப்பாட்டினை கொண்டிருப்பதாக ஆதாரங்களைத்தருகிறது பிரண்ட்லைன் பத்திரிகை.
காண்க: 3.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆந்திர கிருஷ்ணா-
கோதாவரிஆற்றுப்படுகை கச்சா எண்ணெய் உற்பத்தி மட்டுமே ஒட்டுமொத்தஇந்திய எண்ணெய் உற்பத்தியில் 60 % காண்க: 4. 2002
ல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயலில் உலகின்மிகப்பெரிய எண்ணெய் கண்டுபிடிப்பு ரிலையன்சின் திருபாய் 1எண்ணெய் வயல் .
காண்க:மற்றும் காண்க: 5.
எந்தெந்த தனியார் அந்நிய நிறுவனம், இந்தியாவின் எந்தெந்தஎண்ணெய் வயல்களை கொள்ளை அடிக்கலாம் என்று மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தனியார்?
அரசு அனுமதித்துள்ளதைக்காணலாம்.

6.
இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம்,மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெறும் இலாபத்தைவிடஅதிகமான இலாபத்தைக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து,
சுத்திகரித்து,
பெட்ரோலியப் பொருள்களாக ஏற்றுமதி செய்வதன்மூலம் பெறுகிறது.
7.
ரிலையன்சு நிறுவனம் எண்ணெய் யைத் துரப்பணம் செய்தல்,
உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்களையும் செய்கிறது.
கோதாவரிப்படுகையின் எண்ணெய் வயல்களில் உற்பத்தி-
பகிர்வு ஒப்பந்த (PSC)
விதிகளுக்குப் புறம்பாக ரிலையன்சு செயல்படுகிறது என்றுஅந்நிறுவனத்தின் மீது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கைஅலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
8.
கோதாவரிப் படுகை டி6
எண்ணெய் வயலில் 1.85
பில்லியன் டாலர்அளவுக்கு உற்பத்திச் செலவைப் பொய்யாகக் காட்டியுள்ளது. இதைரிலையன்சு நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என்று தலைமைக்கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
காண்க:9.
ஆந்திராவின் கிருஷ்ணா-
கோதாவரி ஆற்றுப்படுகை யில்ஏராளமாக பெட்ரோல் வளம் இருப்பதை இந்திய செய்மதி மூலம்கண்டுகொண்ட அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாநிலஅரசுக்கு உரிய ராயல்டி தராமல் சோனியா காங்கிரஸ் மூலம்கொள்ளை இலாபம் பார்த்தது (
வருடத்துக்கு 25,000
கோடி).
மாநிலத்துக்கும்,
தனக்கும் எதிர்பார்த்த ஆந்திர முன்னாள் முதல்வர்ராஜசேகர் ரெட்டி உலங்கு வானூர்தி "விபத்தில்" கொல்லப்பட்டார்.காண்க:
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஆந்திர முன்னாள்முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு காரணம் என்று ரஷ்யபத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது. இது குறித்த ரஷ்ய நிறுவனத்தின் தகவல். காண்க:
ஒரு எண்ணெய் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பை ஒரு மாநில முதல்வரே தடுக்க முடியாது என்றால்
இந்த நாட்டை ஆட்சி செய்வது யார்? தனியார் கும்பல்கள்கொள்ளையடிப்பது எவ்வளவு?
கெய்ன் (Cairn) நிறுவனம்
1. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றானஇராஜஸ்தான் கச்சா எண்ணெய் வயலில் எண்ணெய் எடுக்க கெய்ன்(Cairn, Haryana) நிறுவனத்தை இந்திய அரசு அனுமதித்துள்ளது.காண்க: 
2. இராஜஸ்தானில் மட்டுமல்ல காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய்கிணறுகள், தஞ்சை காவிரி படுகை வரை அந்தகெய்ன் (Cairn) நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1989 லிருந்து இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிலவரம்
YEAR PETROL KEROSENE DIESEL LPG
--------------------------------------------------
Apr 1 1989 8.50 2.25 3.50 57.60
Oct 15 1990 12.23 2.77 5.05 --
Jul 25 1991 14.62 2.52 -- 67.90
Sep 16 1992 15.71 -- 6.11 82.75
Jul 03 1996 21.13 -- 9.04 119.95
Jan 15 2000 25.94 -- 14.04 --
Mar 01 2002 26.54 8.98 16.59 259.95
Jan 16 2003 30.33 -- 19.47 --
Jun 16 2004 35.71 -- 22.74 261.60
Nov 05 2004 39.00 -- 26.28 281.60
Jun 06 2007 43.52 -- 30.48 --
Jun 05 2008 50.56 -- 34.80 346.30
Apr 01 2010 47.93 -- 38.10 310.35
Jun 26 2010 51.43 12.22 40.10 345.35
காண்க:
3. நம்ம தமிழ் நாட்டிலிருந்து ஒரு பார்வை.
1. தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம்,அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால்உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது.
திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் இயற்கை எரிவாயுகிடைக்கிறது.
இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்றஇந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக்காட்டி
தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?
2. அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்கமுடியும். தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் இந்தியன் ஆயில்கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்குஅங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால்தான்.
3. அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்குஉரிமைத்தொகை (ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடுஇளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடிநம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.
4. காவிரிப்படுகையை இந்திய அரசு அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும்போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்” .காண்க:
5. பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு தில்லியில் ரூ. 7.54என்றால் தமிழ்நாட்டில் ரூ.7.98
அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும்கூடுதல் பரிசு இது!
6. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம்,அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் ஆகிய இடங்களில்மொத்தம் 28 எண்ணெய், எரிவளிக் கிணறுகள் இருக்கின்றன.இவற்றிலிருந்து மாதந்தோறும் 40 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு மாதத்திற்கு 1.20 இலட்சம் கிலோலிட்டர் ஆகும். டீசல் நுகர்வு மாதத்திற்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர்ஆகும்.
அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒருபங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்தபட்ச இலாபம் உட்படஅதன் அடிப்படை விலையானது அதிகம் போனால் லிட்டருக்கு 39ரூபாய்தான்.
மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு தேவைக்குத் தமிழகம் இங்கிருந்துஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சாஎண்ணெய்வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசுவழங்குமேயானால் இப்போது சர்வதேசச் சந்தையில்இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ளமுடியும்.
7. தமிழ்நாட்டின் எரிவளித் [எரிவாயு- (LPG-Liquified Petroleum Gas)]தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது.தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கேசொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விடமலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்)குடும்பங்களுக்கு வழங்கமுடியும். காண்க: இந்தியாவிலுள்ள கார்பொரேட் நிறுவனங்கள் மட்டுமல்ல சர்வதேசகார்பொரேட் நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன.உதாரணமாக...நம் அனைவருக்கும் தெரிந்த விசயம் 2001 செப்டெம்பர் 11. இரட்டைகோபுரங்கள் தகர்ப்பு.
உண்மையிலேயே பின்லேடனோ அல்லது மதத் தீவிரவாதஅமைப்புகளோ இதை செய்ததா என்றால் இல்லை என்பதே உண்மை.
1. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கின் எண்ணெய்வயல்களை ஆக்கிரமிக்க 2001 செப்டெம்பர் 11 க்கு முன்னமே போட்டதிட்டங்கள். காண்க:
2. இரட்டை கோபுரங்கள் இடிப்புக்கு பின்னணி அமெரிக்காவே.காணொளி ஆதாரம்:
3. முக்கியமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் பெட்ரோல்விற்பனையை அமெரிக்க டாலருக்கு பதில் ஐரோப்பிய ஈரோவில்செய்யப்போவதாக அறிவித்தார். இதன் பின்னரே அமெரிக்காஅசாதரணமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது. அமெரிக்க மற்றும் உலக மக்கள் மத்தியில் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுக்க காரணம் இருப்பதை நம்ப வைக்க தன் கட்டடம், மக்களை பலி கொடுத்தது.
According to page 28 of William R. Clark’s book Petrodollar Warfare:“On September 24, 2000, Saddam Hussein allegedly “emerged from a meeting of his government and proclaimed that Iraq would soon transition its oil export transactions to the euro currency.”இன்றைய காலகட்டத்தில் சர்வதேச கார்பொரேட் நிறுவனங்கள் இந்திய விவசாயத்தை தங்களின் கைக்குள் கொண்டுவர துடிக்கின்றன. நீர் வளங்களை அழித்து, விதைச் செல்வங்களை அழித்து, இரசாயன உரங்கள் மூலம் நிலங்களை அழித்து மீத்தேன், பெட்ரோல் மூலம் டெல்டா பகுதிகளை அழித்து கொள்ளை அடிக்க பெரும்படையோடு வருகின்றனர். வரவேற்கும் எட்டப்பர்கள் அதிமுக-திமுக கூட்டணியே.குறிப்பாக இந்தியாவின்
மான்செஸ்டர் ஆக விளங்கிய மகாராஷ்டிரா விவசாயிகளை மரபணு மாற்று பருத்தி மூலம் தற்கொலை செய்யவைத்த பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்து கத்திரிகாய் முதல் நெல் வரை மரபணு மாற்றம் செய்ய காத்திருக்கின்றன.
மரபணு மாற்று என்றால் என்ன?
மரபணு மாற்று உயிர்கள், விதைகள். GMO (Genetically Modified Organisms): இது இயற்கையின் மீதான இறுதி யுத்தம். இது பற்றி இங்கே விளக்கமாக காணலாம். காண்க:1. மரபணு மாற்றம் பற்றி 1997 ல் ஒரு ஆடு குளோனிங் செய்யப்பட்ட போது பரவலாக அறியப்பட்டது.
2. இந்த
குளோனிங் டோலி ஆடு பற்றிய ஒரு விளக்கப்படம் கீழே. படத்தை பெரிதுபடுத்தியும் காணலாம்.
குளோனிங் என்பது என்ன?ஆண் விலங்கின் விந்தணு உட்கருவுக்குப்பதிலாக உடல் செல்லின் உட்கரு (Body Cell Nucleus) எடுக்கப்பட்டு, உட்கரு நீக்கப்பட்ட ஒரு பெண் விலங்கின் சினை முட்டைக்குள் திணிக்கப்பட்டு புதிய உட்கரு உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய உட்கரு வேறொரு பெண் விலங்கு கருப்பையில் வளர வைக்கப்பட்டு பிறப்பு உருவாக்கப்படுவதே குளோனிங் முறை.இது மனிதனில் சோதிக்கப்படவில்லை என்கிறார்கள். விலங்குக்கும் முதலில் அப்படித்தான் சொன்னார்கள்.
4. மரபணு மாற்ற சோதனையை பல வழிமுறைகளில் சோதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
உதாரணமாக:
1. ஆப்பிளின் விதை உட்கருவும், திராட்சையின் விதை உட்கருவும் இணைக்கப்பட்டு கிராப்பிள். (Grape + Apple = Grapple)2. உருளைக்கிழங்கின் விதை உட்கருவும், தக்காளியின் விதை உட்கருவும் இணைக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்டு பொமாட்டொ(Potato + Tomato = Pomato) அல்லது Tomtato என அழைக்கப்படுகிறது.
3. இதைவிட கொடுமை விலங்குகளிலும் இயற்கைக்கு விரோதமாக பரிசோதிக்கப்படுவதுதான்.
ஆண் சிங்கத்தின் விந்தணுவும் பெண் புலியின் சினை முட்டையும் இணைக்கப்பட்டு
லைகர் எனவும், (Lion + Tiger = Liger) அதே போல ஆண் புலி மற்றும் பெண் சிங்கம் இணைத்து
டைகன்(Tiger + Lion = Tigon) எனவும் பரிசோதிக்கப்படுகிறது.
தக்காளியும், தவளையும்
தக்காளி சீக்கிரம் அழுகி கெட்டுப்போகாமல் இருக்க
தவளை ஜீனையும் (Gene) தக்காளியோடு இணைக்கிறார்கள்.
காண்க:இந்த மரபணு மாற்று கத்திரிக்காயிலும் உண்டு. (BT- Bacillus Thuringiensis
காண்க:)
மரபணு மாற்று பயிர்களை உண்ணும் எலிகளுக்கு என்ன ஆகிறது பாருங்கள்: 70 சதவிகித எலிகள் வயிறு வீங்கி வெகு சீக்கிரம் செத்துப்போகின்றன.1. இந்தியாவில் சக்கரை வியாதிகள் போன்ற அனைத்து வியாதிகளும் பெருகுவதற்கு முதற்காரணமாய் மரபணு மாற்று பயிர்கள் இருக்கின்றன.
2. மரபணு மாற்று பயிர், கனிகளில் இருந்து விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. 3. ஒவ்வொரு முறையும் அந்த அன்னிய நிறுவனங்களைத்தான் தேடிச்செல்லவேண்டும் விதை வாங்க. அவர்கள் தரும் விதைதான். வேறு வழியே இல்லாமல் போய்விடும். மீண்டுமாய் அடிமைத்தனத்தில் நமது விவசாயம்.
மரபணு மாற்று பயிர்களை தீவிரமாக நம்மீது திணிக்க நினைக்கும் முக்கிய அந்நிய நிறுவனங்கள்:
முன்னணியில் பிடி கத்திரிக்காயின் நிறுவனம் மான்சாண்டோ
மான்சாண்டோ நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர் உலகின் பெரும் பணக்காரரும், பெரும்
"நன்கொடையாளருமான" பில் கேட்ஸ்.
மேலும்
1. கடந்த டிசம்பர் 14 (2015) அன்று நைரோபியில் நடைபெற்ற உலகவர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியதுஎன்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.
2. ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதிகையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின்விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களைமுன்வைத்திருக்கிறது.
3. இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்
விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்கவேண்டும்.
எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக்கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.
ஏற்றுமதி தொடர்பான அனைத்து மானியங்களும் நிறுத்தப்படவேண்டும். இதை வளர்ந்த நாடுகள் உடனே அமலுக்கு கொண்டுவரவும் வளரும் நாடுகள் 2018-க்குள் செய்து முடிக்க வேண்டும்.
எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
4. இது ஒரு புறமிருக்க, நாட்டின் சேவைத்துறைகளான தண்ணீர்,மின்சாரம், பொது சுகாதாரம், காப்பீடு, கல்வித்துறையை முற்றிலும்வணிகமயமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
WTO (World Trade Organization)-GATS (General Agreement on Trade in Services)
5. இந்தப்பயங்கரத்தைவிட பேரழிவுத் திட்டமான TISA (Trade In Services Agreement) குறித்து நமது பத்திரிகைகள் வாய்திறக்க மறுக்கின்றன. TISAஒப்பந்தத்தின்படி WTO-GATS திட்டங்களை உறுப்பு நாடுகள் எதிர்த்தால்,அவற்றின் மீதான பொருளாதாரச் சங்கிலியை அமெரிக்கா இறுக்கிப்பிணைக்கும்.
6. TISA-ல் பங்கேற்கும் நாடுகள் அது குறித்து பாராளுமன்றங்களிலோ,பத்திரிகைகளிலோ, நீதி சட்ட அமைப்புகளிலோ TISA குறித்துவிவாதிக்கக் கூடாதென விதிகள் போட்டிருப்பதை விக்கி லீக்ஸ்அம்பலப்படுத்தியிருக்கிறது.
7. இன்று 2016 பெப்ருவரி 7 தமிழ்நாட்டிற்கு குறிப்பாக கூடன்குளம்அணுவுலை தொடர்பான ஒரு பயங்கர செய்தி.
இனி அணுவுலையால் பாதிப்பு என்றால் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனமும் பொறுப்பு இல்லை. காண்க:
கோக-கோலா vs டொரினோ
உள்நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தால் பரவாயில்லை. இங்கேதான் ஏற்கனவே மோர், இளநீர், பழரசம் போன்ற இயற்கை பானங்களும், டொரினோ போன்ற நல்ல செயற்கை பானங்களும் இருக்கின்றதே.
இங்கு எதற்கு நீரினை கொள்ளை அடித்து விவசாயத்தை, குடிநீரை அழிக்கும் அமெரிக்க கொக கோலா பானம்.
அய்யா கிணத்தைக் காணோம்.
தமிழகத்திலுள்ள 390000 ஏரி, குளங்கள் 180000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப்பட்டுவிட்டன.
கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெக்திகனி, மகாராஷ்டிராவில் வதா, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள படமாத்தூர், கொளத்தூர் (தற்காலிகமாக தப்பித்திருக்கிறது), தாமிரபரணி ஆற்றுப்படுகை ஜெயங்கொண்ட சோழபுரம், விக்கிரவாண்டி, மதுரை விளாங்குடி (வைகை ஆற்றுப்படுகை) ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான அடிதூரம் நிலத்திற்குள் தோண்டப்பட்டு
கோக் நிறுவனத்துக்காக நீர் உறிஞ்சப்படுகிறது. நாம் கண்ணெதிரிலேயே பகல்கொள்ளை நடைபெறுகிறது. நாமும் கையாலாகா நிலையில் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டும் நமது பணியை முடித்துக் கொள்கிறோம்.
காண்க: 
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளில் (2000-2015) மட்டும்
35,000 கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டு விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன.
காண்க:அணைகள், கண்மாய்கள், ஆறுகளை தனியாருக்கு விட்டுவிட்டு குடிசை வீடுகளில் மழைநீர் சேமிக்க சொல்வது யாரை ஏமாற்ற?எல்லாவகை கார்பொரேட் கொள்ளைகளுக்கும் பின்புலமாக இருக்கும் அமெரிக்காவின் ரகசிய நிறுவனம் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.
சி. ஐ.ஏ (Central Intelligence Agency) அமெரிக்க நாட்டின் உளவு நிறுவனம்.
- 1941 ல் (Office of Coordinator of Information-COI) என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் துவக்கினாலும் 1947 ல் அமெரிக்க அதிபர் ட்ருமன் என்பவரால் சி.ஐ.ஏ (Central Intelligence Agency) என பெயர் மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது. காண்க:
- "கொலைகாரர்களின் நிறுவனம்" என்றழைக்கப்படும் இந்த உளவு நிறுவனத்தால் 1987 வரை மட்டுமே 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
- 1953 ல் ஈரானில் அந்நிய பிரிட்டிஷ் எண்ணை நிறுவனத்தை தேசிய மயமாக்க முயன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் முகம்மத் மொசாதேக் (Mohammed Mossadegh) தூக்கி எறியப்பட்டு சர்வாதிகாரி ஷா என்பவர் அதிபராக அமெரிக்காவால் நியமிக்கப்படுகிறார்.
- 1961 ல் ஐ. நா. வின் தலைமைச்செயலர் ஹம்மர்ஸ்ஜொல்ட்(Dag Hammarskjold) என்பவர் ஜாம்பியாவில் கனிமச்சுரங்கங்களை ஆக்கிரமிக்க நினைத்த பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு எதிரான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால் "விமான விபத்தில்" கொல்லப்பட்டார். காண்க:
5. 1967 அக்டோபர் 9 ல் அர்ஜென்டினா நாட்டுக்காரரான போராளி
சே குவேரா பொலிவியா நாட்டில் கொல்லப்பட்டார்.
6. 1973 ல் சிலி நாட்டின் மக்கள் அதிபர் அலண்டே (Salvador Allende) கொல்லப்பட்டு பினோச்சே (Augusto Pinochet) என்ற சர்வாதிகாரி அதிபராக்கப்படுகிறார்.
காண்க: 7. எண்ணை நிறுவனங்களை தேசியமயமாக்க முனைந்தஇராக்கின் சதாம் ஹுசேன், வெனிசூலாவின் ஹுகோ சாவேஸ் மற்றும்
லிபியாவின் கடாபி வரை காலனியத்தை எதிர்க்கும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் நிகழ்வது இந்த சதிவலையால் ஏற்படும் கொலைதான்.
8.
தென் அமெரிக்காவில் மக்களுக்காக பாடுபட்ட சமூக சிந்தனை கொண்ட தலைவர்கள் சமீப காலமாக இறக்க காரணமாய் இருப்பது
புற்று நோய்.
சர்வாதிகாரிகளுக்கு வராமல் அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் சமூக சீர்திருத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த புற்று நோய் வருவது ஒரு நவீன தொழிநுட்ப அமெரிக்க சதி என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
காண்க: 2008 ல் சி.ஐ.ஏ பராகுவே (Paraguay) நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அந்நாட்டு அதிபர் பெர்னாண்டோ லுகோ வினுடைய டி.என்.ஏ படிமங்களைப் பெற்றதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுருக்கிறது.
காண்க: 1. 2010 ஆகஸ்டில்
பராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லுகோ (60 வயது)
புற்று நோயால் மரிக்கிறார்.
2. 2011 அக்டோபரில்
பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா தா சில்வா (66)
புற்று நோயால் மரிக்கிறார்.
3. 2013 மார்ச் 5 ல்
வெனிசூலா நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸ்(59)
புற்று நோயால் மரிக்கிறார்.
4. 2012 ஜனவரியில்
அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்நெருக்கும் (58)
புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
5.
கியூபா முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ மீதான 12 முறைக்கும் மேற்பட்ட
சி.ஐ.ஏ வின் கொலை முயற்சிகள்.
காண்க:இவை அனைத்தும்
அமெரிக்க சி.ஐ.ஏ வின் அதிநுட்ப அறிவியல் படுகொலைகளே (Scientific Assassinations) என்கிறது சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்.
காண்க:8. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ப்ரெஞ்சுக்காலனியாக இருந்த அப்பர் வோல்டா (Upper Volta) என்ற நாட்டை
நேரியவர்களின் நாடு (Land of Upright Men) என்ற பொருள் பொதிந்த புர்கினா பாசோ (Burkina Faso) என்ற பெயருள்ள நாடாக மாற்றிக்காட்டிய
தாமஸ் சங்கரா என்ற இளம் போராளி
ஆப்ரிக்காவின் சே குவேரா என்றழைக்கப்பட்டார். அவருடைய 5 வருட ஆட்சிக்குள்ளாக, 37 வது வயதிலேயே கொல்லப்பட்டார்.
காண்க: தங்களின் கார்பொரேட் நிறுவனக் கொள்ளைக்காக எதையும் செய்ய துணிந்த ஆக்கரமிப்பாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு கார்பொரேட் கொள்ளையர்கள், கண்டுபிடித்துள்ள எளிதான வழிமுறை மின்னணு ஓட்டு எந்திரம்.
இந்திய மற்றும் வெளிநாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் தமிழ்நாட்டை குறி வைத்து விட்டனர்.
தமிழர்களும், தமிழர் வாழ்வில் அக்கறையுள்ள கட்சிகளும், இயக்கங்களும் விழித்துக் கொள்வது நல்லது.
தொடர்ந்து தேடுவோம்...