EPMA - பரிசளிப்பு விழா இனிதே நடந்தேரியது
EPMA (Emirates Puduvalasai Muslim Association) அமீரகத்தில்
செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும்
நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை
படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும்
பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு
வருகிறது.
கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின்
சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு
பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக 10.06.2015 அன்று நமதூர் மதரஸா வழாகத்தில்
பொழிவுடன் நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை
பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ,
மாணவிகளுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வெற்றிக்காக கடினமாக உழைத்த பள்ளியின்
ஆசிரியர்கள் மற்றும் தாளாளர் உட்பட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி
கவுரவிக்கப்பட்டது.
விழாவிற்கு முஸ்லிம்ஜமாத் தர்ம பரிபாலன சபை தலைவர் ஜனாப்.லியாக்கத் அலி
அவர்கள் தலைமை வகித்தார். ஜனாப். அஹமது அமீன் ஆலிம் அவர்கள் கிராஅத்துடன்
விழா இனிதே தொடங்கியது. சிறப்பு விருந்தினராக EPMA பொறுப்பாளர்களான ஜனாப்.
அஹமது களஞ்சியம், ஜனாப். மீரான் மைதீன் மற்றும் EPMA நிர்வாக குழு
உறுப்பினர் ஜனாப். லியாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி
சிறப்பித்தார்கள்.
மேலும் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளின் தாளாளர் ஜனாப். நிஜாமுதீன், ஜமாஅத்
நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், MMS சங்க நிர்வாகிகள், செயற்குழு
உறுப்பினர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இதர ஆசிரிய-ஆசிரியைகள்,
மாணவ-மாணவியர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த வருடம் முத்தாய்ப்பாக அமீரகத்தை தவிர்த்து குவைத், சவூதி,
மலேசிய,கத்தார் போன்ற நாடுகளில் வசிக்கும் நமதூரைச் சேர்ந்த சகோதர்கள்
பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி
சிறப்பித்திருந்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை EPMA முன்னாள் தலைவர் சகோ. அக்பர் சுலைமான் அவர்கள்
மிகவும் சிறப்போடும், நேர்த்தியோடும், பாராட்டுதலுக்குறிய வகையிலும்
செய்திருந்தார்கள். அவரோடு இணைந்து அமீரகத்திலிருந்து இந்நிகழ்ச்சியை சகோ.
சகாபுதீன், சகோ. அன்வர் ராஜா, சகோ. ஜெய்னுதீன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்
சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்வு வெற்றி என்பது நமதூரை பொறுத்தவரை
வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
ஏனெனில், இந்த வருடம் எடுக்கப்பட்ட முதல்
மதிப்பெண்ணே இதுவரை நமதூரில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களில் முதல்
மதிப்பெண்ணாகும். மேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி
பெற்று 100% தேர்ச்சியை நமது பள்ளிக்கு அளித்துள்ளனர். 42 மாணவ-மாணவியர்
400க்கு மேல்
மதிப்பெண் பெற்றுள்ளதும் தனிச் சிறப்பாகும்.
மதிப்பெண்கள் விவரம்:
1. H.ரஸ்மியா (த/பெ. ஹாஜா பசீர் )- 490/500
2. K. சேது பூமிநாதன் ( த/பெ. கருப்ப சாமி) - 484/500
3. 1. P.கிஷோர் (த/பெ. பாக்கியம்) - 479/500
2. S.சுஸ்மிதா ( த/பெ. சக்திவேல்)- 479/500
தேர்வில் வெற்றிபெற்று ஊருக்கும் நமது பள்ளிக்கும் மாபெரும் வெற்றியைத்
தேடித் தந்த மாணவச் செல்வங்களுக்கும், அதற்காக உழைத்த ஆசிரியப்
பெருந்தகைகளுக்கும் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் சார்பாக
நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Beast Regards