ஏகஇறைவனின் திருப்பெயரால்...
சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் அமைப்பு TNTJ.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கப்படுவதற்கு முன் அதனுடைய நிர்வாகிகள் அதற்கு முந்தைய அமைப்புகளில் அங்கம் வகித்த காலத்திலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் மக்கள் பேரியக்கம் உருவாகி அதை வழிநடத்தி வரும் இதுநாள் வரை இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ள வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை, பேரணிகளை அமைத்து வந்துள்ளது.
அதிகமான மக்களை குறிப்பாக இளைஞர்களைக் கொண்ட இந்த அமைப்பு உணர்ச்சிகளை தூண்டி விட்டு இதுவரை தவறான வழி காட்டியதில்லை.
ஒரு அசம்பாவிதம் கூட இதுவரை நடந்தது இல்லை,குறிப்பாக போலீசுக்கு எந்த விதமான சிரமத்தையும் கொடுக்காமல் அதன் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமைத்துக் கொடுத்து போலீசாரை ஒரு ஓரத்தில் அமரச் செய்த ஆச்சரியமான நிகழ்வு ததஜ போராட்டங்களில் தான் நடந்துள்ளது.
இப்படிப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு அமைப்பை அரசு எப்படி ஊக்குவிக்க வேண்டும் ?.
ஆனால் எப்படி நடத்துகிறது ?.
பூட்ஸ் காலுடன் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி மக்களின் மீது தடியடி நடத்திய போலீஸ் காரர்கள் மீது நடிவடிக்கைக் கோரி பெரும் திரளான மக்களை திரட்டி அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் விதம் நாட்டின் முக்கியமான இருபெரும் நகரங்களில் கோரிக்கை வைத்தப்பிறகும் செவிடன் காதில் ஊதிய சங்காய் அரசு மவுனம் சாதிக்கிறது.
இதுபோன்ற ஒரு முரட்டுப் பிடிவாதத்தை அம்மா அவர்கள் தங்களுடைய அமைச்சர்களிடத்தில் காட்டுவதில் தவறில்லை வாக்களித்து அரியனையில் அமரச் செய்த மக்களிடத்தில் காட்டுவது அழகல்ல ?.
எங்கள் சகோதரர்கள் இந்த காடட்டுமிராண்டிகளிடத்தில் அடிவாங்கியதைக் கூட சகித்துக்கொள்ளத் தயாராக உள்ளோம், ஆனால் உயிரிலும் மேலாக மதிக்கக் கூடிய அல்லாஹ்வுடைய பள்ளியில் பூட்ஸ் காலுடன் நழைந்த போலீஸ் காரர்களுடைய அவமரியாதையை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.
கோரிக்கையின் நியாயத்தை புரிந்துக் கொள்ள முடியாத முதல்வர் என்ன முதல்வர் ?
போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் தான் தடியடி நடத்தினோம் எனப் புளுகும் மாதவன் நாயர் அது உண்மை என்றால் அடித்தவரை மட்டும் இழுத்துச்சென்று நடிவடிக்கை எடுத்திருக்கலாம் !.
எது உண்மை ? எது பொய் ?. என்பதை நீதிமன்றத்தில் சந்திக்கலாம்.
ஜனநாயக நாட்டில் போலீஸ் இப்படித் தான் நடந்திருக்க வேண்டும். அதை விடுத்து திறந்த வீட்டில் நாய் புகுந்த மாதிரி திறந்திருந்திருந்த பள்ளிவாசலுக்குள் நாயை விட கேவலமாக உட் புகுந்து அப்பாவிகளை லத்திச் சார்ஜ் செய்தது ஜனநாயக நாட்டு காவல்துறைக்கு அழகல்ல.
இதற்கு உடனடியாக காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருகு;கும் முதல்வர் அவர்கள் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை இல்லாத மன உலைச்சல்களையும், சிரமங்களையும் எங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
எங்கள் உரிரை கொடுத்தேனும் அல்லஹர்வுடைய மார்க்கத்தை கலப்படமில்லாமல் தூய்மையான முறையில் நிலை நிருத்த புறப்பட்டக் கூட்டம் இது.
அல்லாஹ்வுடைய பள்ளவாசலின் புனிதத்தை நிலை நிருத்த உயிரை விடுவதற்கும் தயங்க மாட்டோம் என முதல்வர் அவர்களுக்கு கூறிக் கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன்.3:104
சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம்.

மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட செய்திகள் - நன்றி : தமிழன் தொலைக்காட்சி
காவல்துறையைக் கண்டித்து சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து செய்தித்தாள்களில் வந்தவை.
மேலப்பாளையம் காவல்துறையை கண்டித்து, சகோ பீஜே அவர்களின் கண்டன ஆர்ப்பாட்ட உரை.