ஈரம்

7 views
Skip to first unread message

kavianban kalam

unread,
Sep 2, 2011, 2:58:21 PM9/2/11
to தமிழிலக்கியம்
ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள்
ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள்
ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள்
ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்

ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள்
ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள்
ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும்
ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும்

ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும்
ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும்
ஈரச்சு ருதியினின் னிசைதானி லையுமாச்சு
ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு

ஈரமென்னு மீரெழுத்தே இக்கவியின் தலைப்பெழுத்து
ஈரமென்னு மீரெழுத்தா லிப்புவியின் தலைநிமிர்த்து
ஈரத்தைக் காட்டவில்லை ஈழத்தை மீட்கவில்லை
வீரத்த மிழனின்னும் விழிக்கவில்லை யானறியேன்

யாப்பிலக்கணம்: காய்+காய்+காய்+காய் (கலிவிருத்தம்)

குறிப்பு:பலகாய்களினலான கல்யாணா விருந்து கூட்டு
இங்குக் காய்களின்(தேமாங்காய்+புளிமாங்காய்+கூவிளங்காய்
+கருவிளங்காய்) கலிவிருத்தப் பாட்டு


”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: kalam...@gmail.com
shaic...@yahoo.com
kalaam...@gmail.com


அலை பேசி: 00971-50-8351499

Reply all
Reply to author
Forward
0 new messages