இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

4 views
Skip to first unread message

kavianban kalam

unread,
Jan 2, 2011, 11:23:14 AM1/2/11
to தமிழிலக்கியம்
நுனிநாக் காங்கிலம் நுட்பக் கணினி
தனியார்வ நோக்கில் தணியாத தாகம்
இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்
நனிசிறந்தே வாழ்வர் நவில்.


கடின உழைப்பும் கடமை யுணர்வும்

படியும் குணமும் பலமான போட்டியுறும்
சந்தையில் இன்று சிறப்பான எங்கள்
இந்தியர் என்றே இயம்பு.


கடலும் மலையும் கரையுமே தாண்டி
உடலும் உளமுமே உன்னத வேலையில்

ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்
பாடுபடும் தன்மையைப் பாடு.

சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

எனது வலைப்பூத் தோட்டத்திற்கு வலம் வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/

மின்னஞ்சல் முகவரி: kalam...@gmail.com
kalaam...@gmail.com
செல்லிடைப் பேசி: 00971-50-8351499

Reply all
Reply to author
Forward
0 new messages