சேகரப் புதையலே நட்பு
சோதனை விடைகளே நட்பு
சாகர விடியலே நட்பு
சாதனைத் தூண்டுதல் நட்பு
தாகமேத் தீர்த்திடும் நட்பு
தாயினைப் போலவே நட்பு
வேகமாய்ச் செயல்படும் நட்பு
வேரிலே உறுதியாம் நட்பு
“கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்
யாப்பிலக்கணம்: விளம், விளம்,மா என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர்
விருத்தம்