தோல்வி கண்டு துவளுகின்ற
தோழா நீயும் மிரளுவதேன்
ஆல்போ லுள்ளத் துணிவுடனே
ஆழ மெண்ணம் பதிந்திடுவோம்
வேல்போல் கூர்மை அறிவுடனே
வேகம் காட்டி முயலுவதும்
நூற்கள் யாவும் பயிலுவதும்
நுட்பக் கல்வித் தெளிவதுமே
வேலை இல்லை; திகைத்தலின்றி
வேலை ஒன்றைத் துவங்கிடுவோம்
காலை மாலை உழைத்திடுவோம்
காலம் தன்னை மதித்திடுவோம்
*பாலை நீராய்க்* கருத்திலிடு
பாழாக் காத பயிற்சியெடு
சோலை யாகச் செழித்திடுமே
சோம்பல் போர்வை ஒழித்திடவே
குறிப்பு: *பாலை நீராய்= பாலைவனத்தில் கிட்டும் தண்ணீர் போல் கருதி
வாழ்வைப் பாழாக்காது வாழ்தல்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி: