...
வண்டுதிர்க்கும் பூக்களாய் வாடு மதனாலே;
உண்டுமகிழ்ந் துன்னை உதறிடு வேனென்று
கொண்டுள்ள எண்ணத்தால் கொன்று விடாதுடன்
விண்டுவிடு உண்மை நலம்.
வண்டுதிர்க்கும் பூக்களாய் வாழ்வு மடியாது;
தண்டுபோ லுன்னையேத் தாங்கிடு வேனென்று
பண்டுதமிழ் காதல் படித்த நமதுள்ளம்
கொண்டுள்ள பாடம் காண்.
வண்டுதிர்க்கும் பூக்களாய் வாழ்வு குலைந்தாலும்
மீண்டும் மலர்ந்திட மீண்டு வரவேண்டு மென்றுநான்
வேண்டும் தொழுகையில் வேண்டினே னென்றுநான்
ஈண்டு பகர்தல் சிறப்பு
"கவியன்பன் கலாம்”, அதிராம்பட்டினம்