புத்தாண்டில் உறுதி மொழி

5 views
Skip to first unread message

kavianban kalam

unread,
Dec 31, 2010, 7:46:34 AM12/31/10
to தமிழிலக்கியம்
பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக்

காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும்

பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற

ஊக்கம் பெறுதல் நலம்.

நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை

பலமுடனே தேகப் பயிற்சி – விலகிவிடும்

நோய்கள் விரைவாக நோக்காய் அடிக்கடிநாம்

காய்கனிகள் உண்ணல் சிறப்பு.

சிறப்பான வாழ்வைச் சிறிதாய்ச் சுருக்கிப்

பிறப்பால் உயர்ந்த பிறவி - நிறத்தால்

இனத்தால் மொழியால் இழிவாய்ப் பிரியும்

மனத்தினை விடச்சிறக்கும் நாள்.

நாளும் மனத்திலே நாட்டம் மிகுந்திட

ஆளும் இறையினை ஆர்வமுடன் - கேளும்

வளமான வாழ்வு வலுவான எண்ணம்

களத்தில் மகிழ்வினைப் புகுத்து.

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

என் வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:

http://www.kalaamkathir.blogspot.com/

Reply all
Reply to author
Forward
0 new messages