புத்தாண்டு வாழ்த்துக்கள்

4 views
Skip to first unread message

kavianban kalam

unread,
Dec 30, 2010, 11:42:04 AM12/30/10
to தமிழிலக்கியம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்"


பூத்திருக்கு புத்தாண்டு
காத்திருக்கு கடமைகள்
நேற்று வரை யாத்த
கனவுக் கவிதைகள்
நனவாகும் காலம்!
வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை;
செலவாகும் நாட்களால் வரவைக் கழிக்கின்றோம்-
நாட்காட்டி காசோலையாக்கி கிழிக்கின்றோம்....

நாட்கள் கூட்டினால்
நம் ஆயுளின் வருடம் குறைகின்றது!
இது தான் வாழ்க்கைக் கணிதம்;
எதிர் விகிதம்
புது விகிதம்

இக்கணிதத்தை வடிவமைத்த
தக்க பெரியோன்
எக்காலமும் நமக்கு
நற்காலமே நல்குவானாக...!!!!

-:கவியன்பன்: கலாம், அதிராம்பட்டினம்
http://www.kalaamkathir.blogspot.com/

Reply all
Reply to author
Forward
0 new messages