என்ன செய்வேன்? (குட்டி வாழ்த்துக் கவி)

2 views
Skip to first unread message

kirikasan

unread,
Jul 26, 2010, 5:55:11 PM7/26/10
to தமிழிலக்கியம்
மெல்ல எழுந்திடும் பிள்ளையெனத் தமிழ்
சொல்லும் இலக்கியமே
வெல்லக் கருங்கட்டி என்னத் தமிழ்சுவை
இன்புறத் தந்திடுவாய்
வல்ல நடைகொண்டு நல்லுலகில்முன்னே
வந்து இருந்திடுவாய்
சொல்லும் கதை உரை செய்தி கவிதையென்
றின்பங்கள் தந்திடுவாய்

கன்ன மிடுஞ்சிறு கள்வனென உன்னில்
காணும் நவ மணிகள்
பொன்னும் புதையலும் அள்ளி எடுத்துமே
என்றுமே இன்புறுவேன்
என்னை ஒருவனென் உள்ளம் மகிழ்வுற
அன்புக் கரமளித்தாய்
அன்னை யவள்தமிழ் அன்பு வழி நின்று
பின்னிக் கவி படைப்பேன்.

அன்புடன்
கிரிகாசன்

Reply all
Reply to author
Forward
0 new messages