1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ? · நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள். 2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ? · தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ? · ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் 4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன். · ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள். 5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ? · நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள் 6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ? · அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் 7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ? · அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள் 8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ? · எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள் 9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ? · ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். 10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ? · நற்குணமுடையவராக ஆகி விடுங்கள் 11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ? · குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள் 12. பாவங்கள் குறைய வழி என்ன ? · அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள் 13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ? · அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும் 14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ? · பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள் 15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ? · விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர் 16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ? · அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள் 17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ? · (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள் 18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ? · அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள் 19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ? · கண்ணீர், பலஹீனம், நோய் 20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ? · இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது 21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ? · மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது 22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ? · கெட்ட குணம் – கஞ்சத்தனம் 23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ? · நற்குணம் – பொறுமை – பணிவு 24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ? · மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள் ( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் ) |
| Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |