ஒரே வார்த்தையால் முஸ்லிம் ஆன இந்துச் சகோதரர் – தென்றல் கமால்
பெருநாள் அன்று ஓர் அரபு நாட்டிலிருந்து வந்த தப்லீக்கில் ஈடுபாடுள்ள பெரியவர் ஒருவரைக் காண உணவுக்குப் பின் அவருடைய சிற்றுரையை கேட்க வாய்ப்பு ஏற்பட்டது
அவர் சொன்ன ஒரு விஷயம் நெகிழ வைத்தது
அவர் சிற்றுரையை முடித்து விட்டு சொன்னார் எந்த நிலையிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அதன் பலன் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் சொல்ல இயலாது
என்று சொல்லி விட்டு அந்த உண்மைச் சம்பவத்தைச் சொன்னார்
ஒரு முறை ஒர் இந்துச் சகோதரர் அவரிடம் வந்து தான் இஸ்லாத்தை தழுவ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்
அவர் அவரிடம் காரணம் கேட்டுள்ளார் தாங்கள் இஸ்லாத்தை தழுவ முடிவெடுத்ததற்கான காரணமென்ன என்று
சம்பவம் கீழே .........
அரபு நாட்டில் பணியாற்றும் இந்துச் சகோதரர் அவர்
சோகமாக இருந்துள்ளார்
அவரைக் கண்ட அரபி “ ஏன் சோகமாக இருக்கிறீர்“ என்று கேட்டுள்ளார்
அவர் “ என் தாய்க்கு கேன்சராம். 3 மாதங்களுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டாராம்” என்றாராம்
அந்த அரபி உடனடியாக “ அல்லாஹ் கரீம் ....... அவன் உன் கஷ்டத்தைப் போக்குவான் “ என்றுள்ளார்
அதைக் கேட்ட அந்த நபர் எழுந்து குளித்து நல்ல ஆடைகளை புனைந்து அல்லாஹ்விடம் நாம் தொழுவது போலவே செய்து இறைஞ்சியுள்ளார்
மறுநாள் அவருக்கு ஃபோன் வந்த தாம் .. தவறுதலாக வேறு ஒருவருடைய கேன்சர் ரிப்போர்ட்டை உங்கள் தாய்க்கு சொல்லி விட்டோம் என்று
இந்தச் சம்பவமே அவருக்கு அல்லாஹ் மேல் அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டு அவர் இஸ்லாத்தை ஏற்க காரணமென்றார்
அந்த அரபி அல்லாஹ்வின பெயரைச் சொன்னதே அவர் இஸ்லாத்தின் பக்கம் திரும்ப ஒரு திருப்புமுனையாய் அமைந்தது என்று
(இதே அந்த அரபி வெறும் “சாரி“ என்று சொல்லி விட்டுப் போயிருந்தால் இது நிகழ்ந்திருக்குமா !) ( என் கருத்து)
சொல்லிவிட்டு எந்த நிலையிலும் இறைவனைப் பற்றிய எண்ணத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்துவதற்காக வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் பய்னபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார்
அதற்குப் பின் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுத்து விருத்தசேதனம் செய்வித்து இஸ்லாத்தில் இணைத்தோம் என்றார் அந்தப் பெரியவர்
| Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |