(கீழை ஜஹாங்கீர் அரூஸி)
உத்தரப் பிரதேசத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையில் அதன் விசாரணை அதிகாரியே முக்கிய குற்றவாளி என ராம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நகரில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றியவர் ஷம்ஷாத் மிர்சா. இவர் கடந்த டிசம்பர் 12, 2001 அன்று நால்வரால் அவரது வீட்டிலேயே அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை குடும்பத் தகராறு காரணமாக செய்யப்பட்டதாக வழக்கின் முக்கிய எதிரிகளாக மிர்சாவின் மனைவி ஜஹீதா மிர்சா, 20 வயது மகன் கமால் அகமது மிர்சா மற்றும் சயீதா பாத்திமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கை சிவில் லைன் போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பி.டி.ரத்னாகர் விசாரித்தார்.இதில் விசாரணைக் கைதியான கமால் மிர்சா 2002-ம் ஆண்டில் சிறையிலேயே அடித்துக் கொல்லப் பட்டார். தாய் ஜஹீதா மிர்சாவிற்கு ஜாமீன் கிடைக்க ராம்பூரின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமார் 13 வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி நரேந்தர் சிங், வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரும் நிரபராதிகள் என விடுவித்ததுடன் வழக்கை விசாரித்து வந்த அதன் விசாரணை அதிகாரி ரத்னாகர்தான் முக்கிய குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.
இதற்கு முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த மிர்சாவின் பக்கத்து வீட்டுக்காரரான உமேஷ் துபே தன்னை ரத்னாகர் மிரட்டி வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று மிரட்டி சாட்சியாக்கினார் எனக் கூறியதும் இதுபோல் மேலும் சில வழக்குகளில் ரத்னாகர் சிக்கி சிறையில் இருந்ததை ஆதாரமாக காட்டப்பட்டதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
மேலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரத்னாகரும் தனது குற்றத்தை நீதிபதி முன்பாக ஒத்துக் கொண்டார்.
மிர்சா மற்றும் அவரது மகன் கமால் ஆகிய இருவரையும் கொன்றதாக இரண்டு கொலை வழக்குகள், சாட்சிகளை மிரட்டியது, உண்மையை மறைத்தது, அரசு பணியை செய்யத் தவறியது என்பது உட்பட ஒன்பது வழக்குகளின் பிரிவுகளின் கீழ் போலீஸ்
அதிகாரி ரத்னாகரை கைது செய்து வழக்கை புதிதாக விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞரான தேவேந்திரகுமார் கூறுகையில், ‘ரத்னாகர் சம்பந்தப்பட்ட சில ஆபாச புகைப்படங்களின் ரோல் ஒன்று, மிர்சாவிடம் வேறு ஒருவர் மூலம் சிக்கிவிட்டது. இதை அறிந்த ரத்னாகர், அந்த ரோலை மிரட்டி பிடுங்கும் முயற்சியில் மிர்சாவை கொலை செய்து விட்டார்’ எனத் தெரிவித்தார்.
கொலை செய்யும் முன்பாக மிர்சாவிற்கு அவரது குடும்பத்தினர் விஷம் கலந்த உணவளித்தனர் எனக் கூறிய ரத்னாகர் அதன் மருத்துவ சான்றிதழை பெறவில்லை என தேவேந்திரகுமார் மேலும் கூறினார்.
"2010-ல் சாஹிபாபாத் போலீஸ் நிலையப் பணியில் ரத்னாகர் இருந்தபோது ஒரு விசாரணை கைதியை கொன்ற வழக்கில் சிக்கி குற்றவாளி என
தீர்ப்பளிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது பிஜ்னோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்".
இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் தனிமனித உரிமையை பறிப்பதாக வானத்துக்கும்,பூமிக்கும் எகிறி குதித்த உச்சநீதிமன்றம் ஷம்சாத் மிர்சா என்னும் அப்பாவி குடும்பத்துக்கு என்ன சொல்லப்போகிறது?
ஒரு காவல்துறை அயோக்கியனால் ஷம்சாத் மிர்சா என்னும் அப்பாவி கொல்லப்பட்டதுமில்லாமல்,அந்த கொலைப்பழியை அவரின் குடும்பத்தினர் மீதே சுமத்தி கொலையாளியின் மகனான ஓர் இளைஞனையும் கொன்றொழித்து,மிர்சாவின் பெற்றோர்களையும் 13ஆண்டுகளாக சிறையிலடைத்து மிர்சாவின் மொத்த குடும்பத்தையும் சிதைத்து சின்னா பின்னமாக்கியது எந்த சட்டம்?
2010-ல் சாஹிபாபாத் காவல்நிலையத்தில் ரத்னாகர் பணியிலிருந்த போது விசாரணை கைதியை கொன்றதற்கு 7ஆண்டுகள் மட்டுமே தண்டனை என்பதுதான் உச்சநீதிமன்றம் சொல்லும் தனிமனித பாதுகாப்பு உரிமையோ?
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து காணப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட மிகவும் நீதமானது இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் என்பதை ஷம்சாத் மிர்சாவின் கொலை சம்பவம் நிரூபணமாக்கி உள்ளது.
மிர்சாவையும் அவரது மகனையும் கொன்ற ரத்னாகர் என்னும் கொலைகாரனை ஷரீஅத் நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்தால்...அவனது தலை துண்டிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்பாகி இருக்கும்.
அதே வேளையில் மிர்சாவின் பெற்றோர்கள் அல்லது மனைவியோ கொலைகாரன் ரத்னாகரை மன்னித்து விடுகிறோம் என சொல்லிவிட்டால் அவனது மரண தண்டனை ரத்து
செய்யப்பட்டுவிடும்.
மொத்தத்தில் அநீதம் இழைக்கப்பட்டவரின் கையில் தான் கொலைகாரனின் முடிவே தவிர பஞ்சாயத்துக்களிடம் அல்ல என்பதை ஷரீஅத் சட்டத்திற்கெதிரானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தகவல் உதவி:THE HINDU
------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait