குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில் நாட்காட்டி / காலண்டர் வெளியீடு

2 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 6, 2019, 12:56:08 PM1/6/19
to கலீல் பாகவீ, Ilangovan Munuswamy

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில் நாட்காட்டி / காலண்டர் வெளியீடு

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 2019ம் ஆண்டு ஆண்டு நாட்காட்டி / காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி அச்சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் ஹச். முஹம்மது நாஸர் தலைமையில் நடைபெற்றது.

ஆங்கிலம் & ஹிஜ்ரீ தேதிகள், இஸ்லாமிய முக்கிய தினங்கள் குவைத், இந்திய, தமிழக மற்றும் இலங்கை விடுமுறை நாட்கள் போன்றவற்றுடன் தமிழ், அரபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் உள்ளடக்கிய பெரிய அளவிளான வண்ண நாட்காட்டியை வருடந்தோறும் ஒவ்வொரு ஆங்கில ஆண்டின் துவக்கத்திலும் விளம்பரதாரர்களின் ஒத்துழைப்புடன் ஆயிரக்கணக்கில் வெளியிட்டு குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும்.

இவ் வெளியீட்டு நிகழ்ச்சிகள் கடந்த பதினான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

குவைத் ஜி.எம்.எஸ் கார்கோ நிறுவனத்தின் நிறுவனர் மருத்துவர் ஜகபர் அலி மற்றும் குவைத் ரிலையன்ஸ் கார்கோ நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் காதர் இருவரும் நாட்காட்டிகளை வெளியிட சங்கத்தின் ஆலோசகர்களும், சமூக நல ஆர்வலர்களும், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நாட்காட்டி குறித்த விபரங்களை விளக்கியதுடன், இந்த நாட்காட்டி வெளிவருவதற்கு உதவிய விளம்பரதாரர்கள், வடிவமைப்பாளர், அச்சக உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி ஜும்ஆ பேருரையாற்றினார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் 2019ம் ஆண்டு நாட்காட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலதிக செய்திகளுக்கும், படங்களுக்கும்.... https://www.facebook.com/q8tic/posts/2440789565994864

குவைத்தில் வசிப்பவர்கள் கே-டிக்தமிழ் பள்ளிவாசலிலும், விளம்பரதாரர்கள் நிறுவனங்களிலும் இந்த நாட்டிகாட்டியை பெற்றுக் கொள்ளலாம் என சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
www.k-tic.com 

--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
ங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி  / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ  : (+965) 9787 2482
வாட்ஸ்அப் : +965 6664 1434
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

K-Tic cal 2019 1.JPG
K-Tic cal 2019 2.JPG
K-Tic cal 2019 4.JPG
K-Tic cal 2019 3.JPG
K-Tic cal 2019 5.JPG
K-Tic cal 2019 6.JPG
K-Tic cal 2019 7.JPG
K-Tic cal 2019 8.JPG

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 6, 2019, 12:58:38 PM1/6/19
to q8_...@yahoo.com
K-Tic cal 2019 1.JPG
K-Tic cal 2019 2.JPG
K-Tic cal 2019 4.JPG
K-Tic cal 2019 3.JPG
K-Tic cal 2019 5.JPG
K-Tic cal 2019 6.JPG
K-Tic cal 2019 7.JPG
K-Tic cal 2019 8.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages