*எப்படியிருந்த பெருநாள் தொழுகைகள் - MYPNO அலசல்*
இந்த பதிவு ஒரே நாளில் பல்வேறு நடக்கும் இடங்களில் பெருநாள் தொழுகையை பற்றியது. பிறை/கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறு நாட்களில் நடப்பவை குறித்தானது இல்லை.
சில பத்தாண்டுகளுக்கு முன், ஒரே ஜும்ஆ பள்ளி என்பது மாறி இரண்டு பள்ளிகளில் என்றானது.
அதிர்வுகள் ஏற்பட்டாலும் இட பற்றாக்குறை போன்ற காரணங்கள் சொல்லிக்கொண்டு விஷயம் கடக்கப்பட்டது
கொள்கை காரணங்கள் சொல்லிக்கொண்டு இரண்டு பள்ளிகளில் ஜும்ஆ என்றானது.
ஒரே இடத்தில் பெருநாள் தொழுகை என்று மீராப்பள்ளியில் நடைபெற்றது, திடல் தொழுகை கோரிக்கை வைக்கப்பட்டு ஏற்கப்படாததால் நபிவழி திடல் தொழுகை என்று பிரிந்தது.
தற்போது
(2022-ஆண்டு)
இந்த ஈதுல் ஃபித்ரில் கிட்டதட்ட அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது எந்தவித சலனங்களும் இல்லாமல் கடந்து செல்லப்பட்டது.
முன்னர் நடந்த பிரிவினைகளுக்கு, இடப்பற்றாக்குறை, கொள்கை என்று ஏதாவது சப்பை கட்டு கட்டலாம். நம்புவதற்கும் நாதி இருந்தது.
ஆனால் இப்போது நடந்துள்ள இந்த கூத்திற்கு லாஜிக்காக கூட எந்த நியாயமும் சொல்ல முடியாது.
இரண்டு பள்ளியில் தவிர திடல் தொழுகை இல்லை.
மீராப்பள்ளியில் தாராளமாக இடம் இருக்கிறது.
இடையே 500 மீட்டர் தொலைவு தூரம் கூட இல்லாத காதரியா, மதீனா பள்ளிகள் மற்றும் மீராப்பாள்ளிக்கு மிக அருகாமையில் இருக்கும்
கெளஸ் பள்ளி
இன்னும் இது போன்று அவசியமே இல்லாத பள்ளிவாசல்களில் *தனித்தனி பெருநாள் தொழுகை என்பது எந்த வகையில் சரி?*
ஆண்டிற்கு இருமுறை முஹல்லா எல்லைகளை கடந்து மஹ்மூத்பந்தர்வாசிகளாக நாம் இணைவது இல்லாமல் போகிறதே...
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஈத்கா மைதானத்தில் தொழுகை நடைபெற்றதாக ஊர் பெரியவர்கள் சொல்கின்றனர். *20 வருடங்களுக்கு முன் கூட முஹல்லா வாரியாக மக்கள் இணைந்து தக்பீர் சொல்லிக்கொண்டு* மீராப்பள்ளியில் சென்று ஒன்றாக தொழுத வரலாற்று நினைவுகள் நம்மில் உள்ளது.
சில விஷயங்களை அலசி பார்ப்போம்.
பல முஸ்லிம் ஊர்களிலும் பல்வேறு பெரிய பள்ளிகள் இருந்தாலும் பெருநாள் அன்று ஜமாத் அல்லது பெரிய பள்ளியின் சார்பாக திடலில் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு ஊரே அங்கு கூடும். சில ஆண்டுகளுக்கு முன் நபிவழி திடல் தொழுகை கோரிக்கை முதன் முதலில் *மீராப்பள்ளியிடம் வைக்கப்பட்டது அப்போதே அவர்கள் ஒத்துவந்திருந்தால்* இன்றும் அவர்கள் தலைமையிலேயே ஒரே பெருநாள் தொழுகையாக திடலில் நடந்து இருக்கும். அங்கே ஆரம்பித்தது பிரச்சனை.
திடலில் நடத்தலாம் என்று வாத்தியாப்பள்ளி முன்னெடுத்தது, கொள்கை காரணங்கள் என்று மர்க்கஸோடு சேர்த்து மூன்று என்று ஆனது. திடலில் தொழ விரும்புபவர்கள் அங்கு தொழட்டும் பள்ளியில் விரும்புபவர்கள் இங்கு தொழட்டும் என்று கடந்தோம். இதுவரை நடந்தவைக்கு ஒரு காரணம் லாஜிக் குறைந்தபட்சம் இருந்தது. ஆனால் இன்று பல சிறிய பள்ளிகளிலும் பெருநாள் தொழுகைக்கான லாஜிக்/காரணம் புரியவில்லை.
*வசூலுக்காக அல்லது பெருமைக்காக என்று மக்களே காரணங்களை அனுமானித்து கொண்டிருக்கும் நிலையில் வெளிப்படையாக பள்ளி நிர்வாகிகள் எதற்காக தனி தனி பெருநாள் தொழுகை நடத்தினர் என்று அறிவிக்க முடியுமா?*
ஒரு வேளை மீராப்பள்ளி அடுத்த வருடம் திடல் தொழுகை நடத்த முன் வந்தால் (கற்பனை தான்) மற்ற அனைவரும் ஒற்றுமையை கருதி தனித்தனி தொழுகையை விட்டு விட்டு ஒன்று சேருவார்களா?
அல்லது எந்த பள்ளியிலும் நடத்தாமல் ஜமாத் சார்பில் திடல் ஏற்பாடு செய்து பொதுவாக பெருநாள் தொழுகைகள் நடத்தப்பட்டால் இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு வரலாம் என்பது பலரின் யோசனையாக உள்ளது.
ஏன் இந்த பிரிவினைகள் என்று மாய்ந்து மாய்ந்து *காரணங்கள் தேடி, குற்றம் சொல்லி குறை பேசுவதில் எந்த பயனுமில்லை* என்பதை உணர்ந்து...
இனிவரும் காலங்களில் ஒரே நாளில் நடக்கும் பெருநாள் தொழுகைகளாவது ஒரே இடத்தில் தொழப்பட்டால் நல்லது என்பதே பெரும்பாலோனவர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும். குறிப்பாக வெளிநாடு வாழ் சகோதரர்களின் அவா.
*MYPNO_Team*