டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி
கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஒன்னேகால் இலட்சம் இந்திய ரூபாயை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் நிதியுதவியாக வழங்கியது.
கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திடம் குவைத் வாழ் தமிழர்கள் இரண்டு மணி நேரத்திற்குள் அள்ளி வழங்கிய நிதியுதவியை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும், சென்னைப் பல்கலைக்ககழக அரபித்துறை பேராசிரியருமான மவ்லவீ முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ அவர்களிடம் சங்கத்தின் தமிழக பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.
நம் குவைத் வாழ் தமிழ் சகோதரர்களின் கொடையுள்ளம் பார்போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த சகோதர, சகோதரிகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இவர்கள் அனைவருக்கும், இனியும் உதவிகளை வழங்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் அருளாளன் அல்லாஹ் வளமான வாழ்க்கையை இம்மையிலும், சுகந்த சுவனத்தை மறுமையிலும் அருளி, பிரதிபலன் வழங்குவானாக!
https://www.facebook.com/q8tic/posts/2377242589016229
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com