குவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி! கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை!!

0 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 14, 2019, 11:21:10 AM1/14/19
to nrinews, idina...@gmail.com, கலீல் பாகவீ

குவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி! கல்வியாளர் ஹுமாயுன் கபீர் சிறப்புரை!!

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நிகழ்ச்சி அச்சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் ஹச். முஹம்மது நாஸர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

குவைத் செந்தமிழர் பாசறையின் சிறப்பு விருந்தினராக வருகை தந்த கும்பகோணம் அன்னை கல்விக் குழுமங்களின் செயலாளரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கல்வியாளர் மு.இ. ஹுமாயுன் கபீர் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ விருந்தினரை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டதுடன், சங்கத்தின் வெளியீடுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ ஜும்ஆ பேருரையாற்றினார். துஆ மஜ்லிஸ் குழுச் செயலாளர் ஷாஜஹான் ஹஜ்ரத் துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலதிக செய்திகளுக்கும், படங்களுக்கும்.... https://www.facebook.com/q8tic/posts/2459798120760675
https://www.facebook.com/q8tic/videos/2106441792768093/

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
www.k-tic.com


--
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
ங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி  / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ  : (+965) 9787 2482
வாட்ஸ்அப் : +965 6664 1434
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

NTK 2019 1.JPG
NTK 2019 9.JPG
NTK 2019 11.JPG
NTK 2019 3.JPG
NTK 2019 4.JPG
NTK 2019 2.JPG
NTK 2019 5.JPG
NTK 2019 6.JPG
NTK 2019 7.JPG
NTK 2019 8.JPG
NTK 2019 10.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages