மார்க்கத்தின் தோழர் விருது பெற்றார் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
இஸ்லாமிய வரலாற்றை இளைய தலைமுறைக்கு எடுத்தியம்ப வேண்டும் என்ற இலட்சியத்துடனும், வரலாறு தெரியாதவர்கள் வரலாறு படைக்க முடியாது என்ற உயரிய நோக்கத்தோடும் வரலாறு படைத்த பல நபித் தோழர்களின் வரலாற்றுச் சுவடுகளை "ஸஹாபாக்களின் வாழ்வினிலே..." என்ற தலைப்பில் வரலாற்று வாரங்களாக வாரி வழங்கிக் கொண்டிருக்கும் "குவைத் திண்ணை தோழர்கள் பிரச்சார மையம்" கடந்த வியாழக்கிழமை இரவு குவைத், மிர்காப் பகுதியிலுள்ள ஹீர் ரன்ஜா உணவக அரங்கில் தனது"ஐம்பதாவது பொன்விழா" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அந் நிகழ்ச்சியில் குவைத் திண்ணை தோழர்கள் பிரச்சார மையத்தின் அமைப்பாளர் முகவை அப்பாஸ், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீக்கு "மார்க்கத்தின் தோழர்" விருது அளித்து கௌரவித்தார்.
மேலும் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
https://www.facebook.com/khaleelbaaqavee/posts/1324038424402668
செய்தி & படங்கள்:
அய்மான்,
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK),
+965 6664 1434
tnb...@gmail.com