குவைத்தில் நடைபெற்ற 14ம் ஆண்டு மீலாது உள்ளிட்ட ஐம்பெரும் விழா!

3 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Dec 8, 2018, 8:53:51 AM12/8/18
to கலீல் பாகவீ, Ilangovan Munuswamy

குவைத்தில் நடைபெற்ற 14ம் ஆண்டு மீலாது உள்ளிட்ட ஐம்பெரும் விழா!

காயல் அரபிக் கல்லூரி முதல்வர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு!!

சிறப்பு மலர் வெளியீடு, போட்டிகளில் / தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்குதல், இன்பத்தமிழ் இலக்கிய விருந்து, பல்வேறு நூல்கள் அறிமுகம் & வெளியீடு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்!!!


குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 14ம்ஆண்டு மீலாது விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நவம்பர் 22, 2018 வியாழன் அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி சிறப்பு மாநாடு நிகழ்ச்சியாக தொடங்கியது. வெள்ளிக்கிழமை (23/11/2018) நண்பகல் ஜும்ஆ சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இரவு நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை (24/11/2018) இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் குமரி மாவட்ட துணைத் தலைவரும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபுக் கல்லூரியின் முதல்வருமாகிய மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் பேராசிரியர் எஸ். செய்யது அப்துர் ரஹ்மான் தங்கள் பாகவீ ஃபாஜில் அஹ்ஸனீ எம்.ஏ., மற்றும் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, தமிழ்த் துறை தலைவரும், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளருமாகிய பன்னூலாசிரியர் முனைவர் 'தமிழ் மாமணி’ பேராசிரியர் மு.அப்துல் சமது பி.எச்டி., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 14ம் ஆண்டு சிறப்பு மலர் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். தேர்வில் வெற்றிப் பெற்ற அல்-ஃபத்ஹ் மதரஸா மாணவ, மாணவியருக்கு குவைத் ரிலையன்ஸ் கார்கோ நிறுவனம் வழங்கிய பரிசுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு நூல்களை அறிமுகம் செய்து அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி, ஹவல்லி கிளை இணைச் செயலாளர் எருமப்பட்டி நைனார் முஹம்மது மற்றும் சங்கப் பாடகர் நீடுர் ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் இஸ்லாமிய பாடல்களை பாடினர். இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் செய்யது அப்துர் ரஹ்மான் தங்கள் பாகவீ பிரார்த்தனைகளுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.

சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். மூன்று நாட்கள் தொடராக நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 2,500 (இரண்டாயிரத்து ஐநூறு) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மலர், தேநீர், பழரசம், பேரீத்தம் பழம், சிற்றுண்டி மற்றும் இரவு உணவுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலதிக செய்திகளுக்கும், படங்களுக்கும்.... https://www.facebook.com/365350416872133/posts/2379274248813063/

நிகழ்ச்சிகளின் முழு காணொளிகளை காண...

முகநூல் பக்கத்தில்... 
1. www.facebook.com/q8tic/videos/304877266843404/
2. www.facebook.com/q8tic/videos/306202616954781/
3. www.facebook.com/q8tic/videos/321663885323223/
4. www.facebook.com/q8tic/videos/1148147412248269/
5. www.facebook.com/q8tic/videos/2221584377874092/
6. www.facebook.com/q8tic/videos/521024661733174/
7. www.facebook.com/q8tic/videos/498717203982106/
8. www.facebook.com/q8tic/videos/474967209695489/

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
www.k-tic.com

  

--
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
ங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி  / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ  : (+965) 9787 2482
வாட்ஸ்அப் : +965 6664 1434
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

K-Tic Seera 14 1.jpg
K-Tic Seera 14 10.jpg
K-Tic Seera 14 11.jpg
K-Tic Seera 14 12.jpg
K-Tic Seera 14 13.jpg
K-Tic Seera 14 14.jpg
K-Tic Seera 14 15.jpg
K-Tic Seera 14 16.jpg
K-Tic Seera 14 17.jpg
K-Tic Seera 14 18.jpg
K-Tic Seera 14 19.jpg
K-Tic Seera 14 2.jpg
K-Tic Seera 14 21.jpg
K-Tic Seera 14 20.jpg
K-Tic Seera 14 22.jpg
K-Tic Seera 14 23.jpg
K-Tic Seera 14 24.jpg
K-Tic Seera 14 25.jpg
K-Tic Seera 14 27.jpg
K-Tic Seera 14 26.jpg
K-Tic Seera 14 28.jpg
K-Tic Seera 14 29.jpg
K-Tic Seera 14 4.jpg
K-Tic Seera 14 30.jpg
K-Tic Seera 14 3.jpg
K-Tic Seera 14 5.jpg
K-Tic Seera 14 6.jpg
K-Tic Seera 14 7.jpg
K-Tic Seera 14 8.jpg
K-Tic Seera 14 9.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages