குவைத்தில் நடைபெற்ற மாபெரும் வாலிபால் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி
குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நாடு தழுவிய தமிழ் அமைப்புகளுக்கான வாலிபால் போட்டியில் 16 அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், தனது பதினான்காம் ஆண்டு மீலாது நபி பெருவிழாவை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் குவைத் தமிழ் அமைப்புகளுக்கான வாலிபால் போட்டிகளை சால்மியா பூங்கா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ போட்டிகளை தொடங்கி வைத்தார். பொருளாளர் திருபுவனம் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்ட சங்கத்தின் விளையாட்டுக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.
குவைத் நாட்டில் சமூக சேவைகள் செய்து கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளில் பதினாறு அணியினர் பங்கேற்றனர்.
ஒரு பிரிவில் நான்கு அணிகள் என மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கும், ஆட்ட நாயகனுக்கும் குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் வழங்கிய சுழற்கோப்பைகளும், பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, குவைத் வின்வே கார்கோ சர்வீஸ் நிறுவனர் ஹச். முஸாவுத்தீன் ஆகியோர் போட்டியில் முதலிடம் பெற்ற அணி தமிழ் நண்பர்கள் (அபூ ஹலீஃபா) அணியினருக்கும், இரண்டாமிடம் பெற்ற குவைத் தமிழ் நண்பர்கள் (ஃபர்வானிய்யா) அணியினருக்கும் சுழற்கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர். ஆட்ட நாயகன் விருது தமிழ் நண்பர்கள் (அபூ ஹலீஃபா) அணியின் தலைவர் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், விளையாட்டுக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலதிக செய்திகளுக்கும், படங்களுக்கும்.... https://www.facebook.com/q8tic/posts/2405026692904485
https://www.facebook.com/q8tic/videos/1947556948881744/
https://www.facebook.com/q8tic/videos/2252926645032770/
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
www.k-tic.com