வரலாற்று பக்கங்களில் மிகப்பெரும் பங்களிப்பை பெற்ற இவ்வூரைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் பரங்கிப்பேட்டை மிக முக்கியமான நகராக திகழ்கிறது. கூடிய விரைவில் முக்கிய சுற்றுலாத் தளமாகவும் உருவெடுக்க உள்ளது. இவ்வூர் மக்கள் தொகை ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் அதிகம். எந்த ஒரு தாலுகா தலைநகரிலும் இல்லாத வகையில் அரசுத்துறைகளின் அலுவலகங்கள், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் - வங்கி - கல்வி நிலையங்கள் அமைந்தும், தாலுகா தலைநகராக ஆக்கப்படாமல் தொடர்ந்து "மாநில அரசால் வஞ்சிக்கப்படும் வரலாற்றுப் பேரூர்", "மத்திய அரசாலும் வஞ்சிக்கப்படுவது தனி வரலாறு".
பரங்கிப்பேட்டைக்கு அனுமதி வழங்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் அனைத்தும் வந்து செல்ல, நிறுத்தப்பட்ட பேரூந்துகள் மீண்டும் இயக்கப்பட, புதிய வழித்தடங்களில் பேரூந்துகளை இயக்க, விரைவு பேரூந்து கள் சிலவற்றை இவ்வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட முறையான பல்வேறு போக்குவரத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர் மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பலமுறை போக்குவரத்து அதிகாரிகளாலும், ஆட்சியா ளர்களாலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஒன்றுகூட நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சிகள், காட்சிகள் மாறினாலும் பரங்கிப்பேட்டை அப்படியே மாறாமல்தான் உள்ளது.
எனவே, பாரம்பரியமிக்க பரங்கிப்பேட்டை போக்குவரத்து குறித்து வலியுறுத்துவதற்காக சில தகவல்களை / கோரிக்கைகளை முழுமையாக தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். தாங்கள் இதை முழுமையாக படித்து, ஆய்வு செய்து, அதற்காக முயற்சி செய்தால் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயனடைய வாய்ப்பாக அமையும்.
தாங்கள் எங்கள் ஊர் மக்களுக்கு உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றோம். மேலதிக விபரங்கள் / ஆதாரஙகள் தேவைப்பட்டால் வாட்ஸ்அப் / மின்னஞ்சல் வாயிலாக எந்நேரமும் தொடர்பு கொள்ளவும்.
மிக்க நன்றி.
- கலீல் பாகவீ,
ஒருங்கிணைப்பாளர், பரங்கிப்பேட்டை பயணியர் நலச் சங்கம் (PNO-PNS)
+91 999 410 6594 |
abka...@gmail.com