Fwd: {STM-Members} Fwd: செய்தியாளர் அறிக்கை

1 view
Skip to first unread message

bharathidasan nagaraj

unread,
Jul 3, 2014, 9:44:00 AM7/3/14
to pork...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
Date: 2014-07-03 18:34 GMT+05:30
Subject: {STM-Members} Fwd: செய்தியாளர் அறிக்கை
To: "stm-m...@googlegroups.com" <stm-m...@googlegroups.com>




---------- Forwarded message ----------
From: ramani <aruv...@gmail.com>
Date: 2014-07-03 13:54 GMT+05:30
Subject: செய்தியாளர் அறிக்கை
To: vas...@rediffmail.com, Sathish Kumar <aekala...@gmail.com>, marxp...@yahoo.com, mani maran <manima...@gmail.com>, Chidambaranathan J <jcbo...@gmail.com>, Thangam Pandian <vik...@gmail.com>, Chellammal Selva <chella...@gmail.com>, sivaraman thangaiyan <siva.t...@gmail.com>, Ezhilan S <tnsm...@gmail.com>, Revathi R <revath...@gmail.com>, Jawahar R <jawah...@gmail.com>, Hari Prasath <harirb...@gmail.com>, Yazhini Munusamy <yazhini...@gmail.com>, ஸ்நாபக் வினோத் ஏ ஜெ <snaba...@gmail.com>, Syed Nasarullah <musal...@gmail.com>, Geetha V <gee...@gmail.com>, Geeta Charusivam <geeta...@gmail.com>, "P. V. Srinivas" <pv.sr...@gmail.com>, Aravinthkumar Kalaivani <kuma...@gmail.com>, "rsriramchn ." <rsrir...@gmail.com>, senthil kumar Tyagrajan <tsk....@gmail.com>, Parimala Panchatcharam <parima...@gmail.com>, Esan Palani <esan....@gmail.com>, அருண்சோரி தமிழ்செல்வி <shor...@gmail.com>, "kannan...@hotmail.com" <kannan...@hotmail.com>, Kavin Malar <jkavi...@gmail.com>, gun...@gmail.com, kaark...@gmail.com


    செய்தியாளர் அறிக்கை           

                                                         02.07.2014

 

 

தருமபுரி - பாதிக்கப்பட்ட நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி மக்களின்மீது காவல்துறையினரின்வன்முறைத் தாக்குதல் - வெடிகுண்டுதுப்பாக்கி பயிற்சி என பொய்வழக்கு

 

 

கடந்த 27.06.2014 அன்று தருமபுரி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிராமப் பொறுப்பாளர் துரை உள்ளிட்ட 7பேரை விசாரணை என்கிற பெயரில் தருமபுரி காவல்துறை கைதுசெய்துள்ளது. துரை மற்றும் ஊர் தலைவர் சக்திவேல் தலைமையில் இளைஞர்கள் மூன்று முறை ஆயுதப்பயிற்சி எடுத்ததாகவும் 2012 அன்று கிராமங்களை எரித்த பா.ம.க. மதியழகன் என்பவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு Indian arms act, explosive substance act, ஐ.பி.சி. 153ஏ, 120பி, (criminal conspiracy, promoting enmity) பிரிவின் அடிப்படையில் துரை உள்ளிட்டு 28 பேர்மீது 28.06.2014 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு. சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறது. இரவு நேரங்களில் 100க்கும் மேற்பட்ட  காவல் படைகள் நத்தம் கிராமத்தைச் சுற்றி ரோந்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து 28.06.2014 அன்று விடியற்காலை காவல்துறையினர் திருப்பதி என்கிற மாணவரைக் கைதுசெய்தது. 29.06.2014 அன்று இரவு 1.00 மணிக்கு மீண்டும் 5 பேரை பெங்களுரில் கைதுசெய்திருக்கிறது.  நத்தம் கிராமத்தில் 20 பேர், அண்ணாநகரில் 10 பேர், கொண்டம்பட்டியில் 20 பேர் என படிக்கும் மாணவர்களை, இளைஞர்களை குறிவைத்து தேடிவருகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதில் அதிகளவு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் உண்மையில் நடந்தது 04.07.2014 அன்று நத்தம் கிராம மக்கள் இளவரசன்  நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடத்திட அனுமதி கேட்டனர். பின் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளநிலையில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதன்  பின்னணியில் தான் காவல்துறையின் கைது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக  இளவரசன் நினைவுநாளில் மைக்செட் வைக்ககூடாது என்று அதியமானையும், உடன் சங்கர், அசோக் என்பவர்களையும் வரவழைத்து 27.06.2014 அன்று மாலை தருமபுரி B1 காவல்நிலையத்தில் விசாரிக்கிறது. அவர்களைத் தேடி வந்தவர்களில் துரை உள்ளிட்ட ஆறுபேரை  கைதுசெய்தது. அவர்களைக் கடுமையாக அடித்து 3.30 மணிவரை விசாரணை நடத்தியது. விடியற்காலை காவல்துறையினர் துரை என்பவரை மட்டும் அழைத்து நத்தத்திலுள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு பின் இளவரசன் கல்லறைக்கு அருகில் வந்து குழிதோண்டச் சொல்லி காவல் துறையினர் வைத்திருந்த துப்பாக்கியை கீழே போட்டு அதனை எடுத்துக் கொடுக்கச் சொல்லி புகைப்படம் பிடித்துள்ளனர்.  பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ளச் சொல்லி மிரட்டி கையெழுத்தும் வாங்கியுள்ளனர். பெங்களுரில் கைதுசெய்யப்பட்ட 5பேரில் அருள் என்பவரை மட்டும் அடித்துக் காலை உடைத்துள்ளனர். அவற்றை வெளியே சொல்லக்கூடாது என்றும், கீழே விழுந்து கால் உடைந்ததாக எழுதி கையெழுத்து வாங்கியுள்ளனர்.

 

மேலும் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையும், காவல்துறை கூறும் செய்திகளும் பல முரணான கேள்விகளை  எழுப்பியிருக்கிறது.

 

1. துடி என்கிற இயக்கம்தான் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க அழைத்துச் சென்றதாக கூறுகிறது. கிறிஸ்துதாஸ் காந்தி வழிகாட்டலில் இயங்கும் இவ்வியக்கம் ஒரு கிறிஸ்தவத் தொண்டு நிறுவனம். மாணவர்களுக்குக்  கல்வி ரீதியான உதவிகளை செய்து வருகிறது.  கிராமங்கள் எரிக்கப்பட்டபோது  அவ்வூர் மாணவர்களை  அரக்கோணத்திற்கு  அழைத்துச்  சென்று கொடுத்த (Skill Development program) பயிற்சியைத்தான் ஆயுதப் பயிற்சிக்குச் சென்றதாக சோடித்துள்ளது காவல்துறை. இவ்வியக்கத்தின் தலைவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி என்பவரை காவல்நிலையத்தில் விசாரித்துக்கொண்டிருக்கிறது.

 

2. இன்னொன்று நத்தம் கிராமத்திற்கு செல்லும் வழியில் இளவரசன் குழிக்கு சிறிது தூரத்தில் சட்ட விரோதமாக காவல் துறையால் சி.சி.கேமரா பொறுத்தப்பட்டு அவ்வழியில் செல்லும் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதை நத்தம் கிராம மக்களும் அறிவர். இந்நிலையில் இளவரசன் குழி அருகில் துப்பாக்கி பதுக்கியிருந்தால் அது கேமராவில் பதிவாகியிருக்குமல்லவா? அதை வெளியிடவில்லையே காவல்துறை? புதைப்பது பதிவாகும் என்பது தெரிந்தே துப்பாக்கியை துரை என்பவர் பதித்து வைத்தாரா? என்கிற கேள்வி எழுகிறது.

 

4 காவல்துறை கண்காணிப்பில் தொடர்ந்து இருந்துவரும் நத்தம் கிராமத்திலிருந்து 2013 ஆம் ஆண்டில் மூன்று முறை பயிற்சி எடுக்கச் சென்றதாக  கூறுகிறது.   அப்பொழுதே காவல்துறை அவர்களை ஏன் கைது செய்யவில்லை?

 

5. கடந்த 30ந்தேதி நாயக்கன் கொட்டாய் பகுதியில் சில வன்னியர் சங்க  உதிரி சக்திகள் தலைமையில் சாலைமறியல் செய்யப் போவதாக துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது. இளவரசன் நினைவுநாளை முன்னிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கோடு இவை ஏற்பாடு செய்யப்பட்டதாகவேத் தெரிகிறது. இளவரசன் நினைவு நிகழ்ச்சி அனுமதி கேட்டதேத் தவறு என்று அதனைத் தடுக்க கைதுசெய்யும் காவல்துறை வன்னியர் சங்க உதிரிகள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

 

6. மேலும் வன்னியர் தரப்பிலிருந்து  ஒருவர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை கூறுகிறது. அவற்றில் இளவரசன் நினைவுநாள் அன்று அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் அங்கு கூடுவார்கள். அதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை  என்பதால்  அதனை உடனடியாக தடுக்க  வேண்டும் என புகார் வந்துள்ளதற்கு பிறகு தான்  இந்த நடவடிக்கையை  எடுக்கிறோம்  என்று  காவல்துறை  தரப்பில் கூறப்பட்டது.

 

மேலும் காவல்துறையின் இவ்வன்முறை செயலில் எஸ்.பி அஸ்ரத் கார்க்கின் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையும் இணைந்திருக்கிறது. இளவரசன் இறுதி அஞ்சலிக்கு ஐ.ஏ.எஸ் சிவகாமி 144 தடையை மீறி நத்தம் கிராமத்திற்குள் வந்திருந்தபோது அவரை கைதுசெய்ய பெரும் போலீஸ் பட்டாளங்களுடன் அஸ்ரத் கார்க் உள்நுழைந்தார். அப்போது மக்கள் அவரை தடுத்து முற்றுகையிட்டனர்.  பிறகு   நவம்பர் 7 கிராமங்கள் எரிக்கப்பட்டு ஒரு வருட நினைவு கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார் எஸ்.பி. அதனை மீறி மூன்று கிராம மக்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 35க்கும் மேற்பட்ட மக்கள்மீது வழக்கு பதியப்பட்டது.

 

இன்று இளவரசன் நினைவு நாளுக்கு அனுமதி கேட்டு மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருந்தது. இத்தகையச் சம்பவங்களும், எஸ்.பி. யின்  நடவடிக்கைக்கு மேலுள்ள அதிகாரிகளின் கடும் அழுத்தமும் காரணமாக இருக்கிறது எனத் தகவல்.

 

மேலும் கிராமங்கள் எரிக்கப்பட்டும், இளவரசன் இறந்தும் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தாழ்த்தப்பட்ட அம்மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள, தங்களுக்கான உரிமைகளை கேட்கவோ, ஆதிக்க சக்திகளை எதிர்க்கவோ கூட பலமின்றி இருக்கிறார்கள். இவர்கள் மீதுதான் பா.ம.க மதியழகனை கொல்வதற்கான திட்டம் தீட்டியதாக பொய் வழக்கைப் பதிவுசெய்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையின்மூலம் சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு துணை நிற்பதையே காட்டுகிறது.

 

இரமணி

மா.லெ மக்கள் விடுதலை

aruv...@gmail.com

9566087526

 


--
You received this message because you are subscribed to the Google Groups "STM Members" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to stm-members...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/stm-members.

Reply all
Reply to author
Forward
0 new messages