பூவுலகின் நண்பர்கள் விடுக்கும் அழைப்பு

134 views
Skip to first unread message

Sundararajan சுந்தரராஜன்

unread,
Jan 28, 2015, 12:58:42 AM1/28/15
to poov...@googlegroups.com

வணக்கம்.
தமிழகத்தில் சுற்றுசூழலைப் பொறுத்தவரையில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவிவருவதை நாம் எல்லோரும் அறிவோம். தென்கோடியில் கூடங்குளம்நியூட்ரினொ தொடங்கி மீத்தேன்,காவிரி வரை தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

 

இது போன்றவொரு நிலையில்உணவுஆற்றல்நீர் ஆகிய மூன்று முக்கியஅடிப்படை சமகால சூழலியல் பிரச்னைகளின் பொருட்டு தொடர்ச்சியான இயக்கங்களை முன்னெடுப்பது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முடிவு செய்திருக்கிறது.

 

தொடர்ச்சியான செயல்பாடுகளைநீண்ட கால உழைப்பை கோரும் இந்த இயக்கங்களுக்கு பங்களிப்பு செய்ய விரும்பும் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற பூவுலகு விரும்புகிறது.

இதற்காக வரும் பிப்ரவரி மாதம் 1ந் தேதி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் சமகால சூழலியல் இயக்கங்களை முன்னெடுத்து செல்ல பூவுலகு உங்களை அழைக்கிறது. உங்களது வருகையை 9841624006 என்கிற எண்ணில் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உண்மையிலேயே வளமான தமிழகம் நோக்கி ஒன்றாக பயணிப்போம்.

இடம் : இக்சா மையம் (கன்னிமரா நூலகம் எதிரில்)
நேரம்: காலை 930 முதல் 1.00 மணி வரை

 

பூவுலகின் நண்பர்கள்


Reply all
Reply to author
Forward
0 new messages