கருத்துக்களும், மாற்றுக்கருத்துக்களும், விமர்சனங்களும் என எவருக்கும்
எவ்வித பாகுபாடும் இல்லாமல் சம வாய்ப்பு வழங்கும் திரட்டியாக
நடுநிலைத்தன்மையுடன் பூச்சரம் திகழ்கிறது.
பூச்சரம் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், பதிவர்களின்
சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், பதிவர்களது தனிப்பட்ட விபரங்களை
ஒருபோதும் கோருவதில்லை என்பது நீங்கள் அறிந்ததே.
இதுவரைகாலமும் பூச்சரத்திலும், ஓகிட்ஸிலும் பதிவர்களே தமது வலைப்பூக்களை
இணைத்துவந்தனர். இந்த நடைமுறையில் நெகிழ்வுத்தன்மை ஏற்படுத்தப்பட்டு
இன்றுமுதல் அங்கத்தவர்களும் வாசகர்களும் தாம் வாசித்த இலங்கைச்சேர்ந்த
(இலங்கையில் வதியும், புலம்பெயர்ந்த) வலைப்பூக்களையும் இணையங்களையும்
பூச்சரத்திற்கு பரிந்துரைசெய்யலாம். பூச்சரத்தின் மின்னஞ்சலுக்கு உங்கள்
பரிந்துரைகளை அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி poosa...@gmail.com
மின்னஞ்சலில் குறித்த வலைப்பூ இலங்கையருடையதுதான் என்பதை பூச்சரம்
உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களை குறிப்பிடுவது சிறந்தது.
பூச்சரத்திற்கு உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அவற்றையும் இதே
மின்னச்சலுக்கு அனுப்பிவைக்கமுடியும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "பூச்சரம்" group.
To post to this group, send email to poos...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to poosaram+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/poosaram?hl=en.