Would any Plano/ Frisco Makkal like to host July Vazhipaadu on 14th? This is a special request and it is for a specific reason. We will have Proff. Nallasivam visiting Dallas - I wouldn't do justification if I were to explain his accomplishments. I am copying the article that was compiled for Fetna.
அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்ப் பண்ணிசை ஆய்வாளர் கோ.ப.நல்லசிவம் அவர்கள் பெட்னா விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா வர இருக்கிறார். பேரவை விழா முடிந்ததும், ஜூலை 10 முதல் 15 ம் தேதி வரை நமது ஊரில், குழந்தைகளுக்கு பயிற்சியும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடத்த ஒப்புக் கொண்டுள்ளார்.
யோகா, கல்வெட்டியல், சுவடியியல், மூலிகை மருத்துவம், பக்தி இலக்கிய ஆய்வாளர், பண்ணிசை ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளரென விளங்குவதோடு, தேவார இசைமணி, சைவச்செம்மல், இலக்கியயிசையரசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற திரு.நல்லசிவம் அவர்கள் இங்கு வருவது நமக்கு ஒரு அரிய வாய்ப்பாகும்.
இவரோடு தமிழகத்திலிருந்து மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த் தி அவர்களும் இணைந்தே பயணிப்பதால் அவரையும் நமது ஊருக்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஜெயமூர்த்த்இ அவர்கள் வருவதும் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாகும்.
அதனால், அதற்குண்டான செலவுகளை இக்குழுவில் இருக்கும் நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும். அவர்கள் இருவரும் இங்கு வருவதற்கான உள்ளூர் விமான கட்டணம், நிகழ்ச்சி நடத்துவதற்கான செலவுகள் மற்றும் அவர்களுக்கான ஒரு சிறிய அன்பளிப்பு உட்பட செலவுகளுக்காக சுமார் $1500 டாலர்கள் தேவைப்படும். உதவ விருப்பம் உள்ளவர்கள் விரைவில் இக்குழுவில் தெரியப்படுத்தவும்.
We are hosting him for the week of July 10-15th. We would like for all our children to participate in workshops that he plans to conduct from July 11-14th, time, venue and a small token fee to be announced later. The last day will be workshop and Vazhipaadu together. July 15th he has committed to do a radio hour and other Tamil organizations are hosting a program the same evening.
I would truly appreciate it if any of you ( Plano or Frisco) can host July 14th so that we make it easier on working parents to attend Vazhipaadu and for children to attend the workshop.
Thank you
Bhuvi