7 views
Skip to first unread message

Muralikrishnan Chinnadurai

unread,
Aug 8, 2014, 5:44:27 AM8/8/14
to CSE PMU GRoup
பலர் இந்தியாவின் ஒரு பகுதியில் முழுக்க முழுக்க இலங்கை ஏர்டெல்லின் அலைவரிசை தான் கிடைக்கிறது என்று நான் சொல்லியதில் இது வர்த்தகம் இதை நீங்கள் குறை சொல்லக்கூடாது என்கிறார்கள்.அவர்களுக்கு நான் தெளிவுப் படுத்த கடமைப் பட்டு இருக்கிறேன்.

ஒரு நாட்டின் உள்ள பகுதியில் இன்னொரு நாட்டின் அலைவரிசை தான் கிடைக்கும் என்றால் அது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம். தனது நாட்டில் இருந்து பேசும் போதே அவர் இலங்கையில் இருந்து தான் பேசுகிறார் என்று நமது உளவுத்துறை எடுத்துக் கொள்ளும் அல்லவா. அது மட்டுமல்லாமல் அதில் உள்ள கொள்ளை என்னவென்றால் தனது நாட்டின் நிலப்பரப்பில் நின்றுக் கொண்டு பேசும் பொழுதே பன்னாட்டு உலாவுதல் வசதியில் பேசுகிறீர்கள் என்று அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

உதாரணத்திற்கு குமுளி கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் இருக்கும் ஒரு இடம் தமிழ்நாடு கேரள எல்லையை தீர்மானிப்பது ஒரு சோதனை சாவடியின் தடுப்புக் கம்பம் தான் அந்த சோதனை சாவடி தடுப்புக் கம்பத்திற்கு அந்த பக்கம் அதாவது தமிழ்நாடு எல்லையில் உங்களுக்கு பெரும்பாலும் கேரளா தொடர்பு அலைவரிசை கிடைக்காது.

கேரளா அலைவரிசை இப்போது குமுளி lower கேம்ப் பகுதியில் கிடைத்தால் அவர்கள் தேசிய உலாவுதல் வசதியில் தான் பேச வேண்டும் அதற்கான கட்டணம் அதிகம் என்று இந்தியாவிலேயே வசூலிக்க முடியும் அப்படி செய்தால் இவர்கள் எளிதில் மாட்டிக் கொள்ளவும் முடியும் .

அரிச்சல் முணையில் இப்படி நடப்பதை ஒரு போதும் அனுமதிக்க இயலாது. இது அந்த நிறுவனம் இந்தய உளவுத் துறையை குழப்பும் யுத்தியாக கூட கையாள வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலிகள் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப் படும் . அங்கு இருக்கும் தமிழர்களை துன்பப் படுத்த இது ஒரு காரணமாக அமையும் .

ஏன் இந்த குறுஞ்செய்தியை வைத்துக்கொண்டு நான் இலங்கை சென்று வந்ததாக ஆதாரம் காட்ட முடியும் என்பது தான். ஏன் இதை வைத்துக் கொண்டு என் மீது போய் வழக்கும் தொடுக்க இயலும் கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்தார் என்று .

இது சாதாரண பிரிச்சனையல்ல .இது மிக முக்கியமான பிரச்சனை ..கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சனை 

முரளிகிருட்டிணன் சின்னதுரை 

--
Love & Regards,
C.Muralikrishnan.DCT.,HDCN.,BE.
CALL @ 9003319806
Reply all
Reply to author
Forward
0 new messages