இனப் படுகொலையில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு .. உயர் தர அலைவரிசை இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது அதுப் போன்ற தொலை தொடர்பு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் கூட செயல்படுத்தப் படவில்லை என்பதினை இன்று உங்களுக்கு உதாரணத்துடன் சொல்கிறேன் . இன்று காலை தனுஷ்கோடிதாண்டி அரிச்சல் முனை பகுதிக்கு சென்றேன் அதுவரை என் செல்லிடப் பேசியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத நிலை அங்கு சென்றவுடன் ஒரு குறுஞ்செய்தி வருகிறது அந்த குறுஞ்செய்தி உங்களுக்காக
Greetings, Ayubowan & Vanakkam from Airtel Srilanka. Here's Wishing you a memorable Stay in Srilanka. Select Airtel/SRI 05/413-50 to roam with Airtel.
Sender +7557
எனக்கு கடைசியாக சிக்னல் கிடைத்த இடம் மூன்றாம் சத்திரம் அங்கிருந்து ஒரு எட்டுக் கிலோமீட்டர் கடல் மற்றும் கடல் மணல் வழியாக தான் அரிச்சல் முனைக்கு செல்ல வேண்டும் .
அரிச்சல் முனையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் இலங்கை .
எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்னல் துளி அளவுக் கூட கிட்டவில்லை ஆனால் 18 கிலோமீட்டர் அந்தப் பக்கம் உள்ள வேறொரு நாட்டிலிருந்து எனது சொந்த மண்ணில் இருக்கும் பொழுது அந்த நாட்டிற்கு வரவேற்கிறோம் என்ற செய்தி வருகிறது. எத்தகையை வலிமையான தொழிற்நுட்பத்தை இலங்கைக்கு அளித்து இருக்கிறது இந்த ஏர்டெல் நிறுவனம் என்பதற்கு இது ஒரு சான்று
முரளிகிருட்டிணன்சின்னதுரை